Tuesday, 2 April 2013

கலப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு ... இங்கு தேவை இன்னொரு பெரியார் !







சாதிகள் இல்லையடி பாப்பான்று பாடிய பாரதி பிறந்த மண்...
 ஜாதிகளை ஒழிக்கப் போராடிய பெரியார் பிறந்த பூமி...  

இப்படியெல்லாம் பெருமை பேசுகிற தமிழ்நாட்டில் இன்றைக்குக் கலப்புத் திருமணங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.


‘நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்,
நாட்டினர்தாம் வியப்பெய்தி, நன்றாம் என்பர்!
ஊடகத்தே, கிணற்றோரத்தே, ஊரினிலே
காதல் என்றால் உறுமுகின்றார்!
  பாடை கட்டி அதனைக் கொல்ல,
வழிகள் செய்வார்! பாரினிலே பொறாமையினால்     
மூடரெல்லாம்  விதிகள் செய்து,
முறைதவறி, இடர்யெய்து கெடுகின்றாரே! ’ 

- மகாகவி பாரதியார்


காதல் என்பதும் ஜாதிகளுக்கிடையேயான கலப்புத் திருமணம் என்பதும் சகஜமாகி விட்டது, கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் எல்லோரையும் போல இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அரசே கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில்
பரிசளிக்கிறது, அதற்கு எதிர்ப்பு என்பதெல்லாம் அந்தக் காலம் என்று நினைத்துக் கொண்டிருப்பவரானால், உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தி.


கலப்புத் திருமணங்கள் கூடாது என்று அண்மைக் காலமாகப் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளன சில ஜாதிய அமைப்புகள். மறைமுகமாக நெருக்கடியும் அழுத்தமும் கொடுத்துக் கொண்டிருந்த ந்த அமைப்புகள், இப்போது பகிரங்கமாக மேடை போட்டுப் பேசுகின்றன, அல்லது அறிக்கைகள் விடுகின்றன.


அது மட்டுமல்ல... 
கலப்புத் திருமணம் புரிபவர்களைகௌரவக்கொலைகள்என்ற பெயரில் தீர்த்துக்கட்டும் போக்கும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் மகாபலிபுரத்தில் நடந்த கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவரும் பாமக சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு கலப்புத் திருமணங்களுக்கு எதிராக மிரட்டும் தொனியில் பேசிய  பேச்சை ஊடகங்களில் படித்த பலர் அதிர்ச்சி அடைந்தனர்.


நம்ம ஜாதியிலதான் நாம கல்யாணம் செய்யணும். எவன்டா ஜாதியை ஒழிச்சான்? யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்புத் திருமணம் செஞ்சு வெச்சா தொலைச்சுப் புடுவேன். வன்னிய இனப் பெண்களை கலப்பு மணம் செய்பவர்களை வெட்டுங்கடா... வன்னிய சங்கத் தலைவர் நான்  ல்றேன்" என்று அவர் பேசியதாக செதி வெளியானது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக  காடுவெட்டி குரு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

 
குருவின் மேடைப் பேச்சை நியாயப்படுத்தி சில காரணங்களைக் கூறுகிறார் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு. உண்மையான புரிதலும் நேர்மையான எண்ணமும் கொண்ட காதலை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால், இளம் வயதுப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து, பின்னர் அப்பெண்ணைக் கைவிட்டுச்செல்லும் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. அந்த ஆதங்கத்தில்தான் குரு அவ்வாறு பேசினார். ஒரு பெண் தன் பெற்றோருக்குத் தெரியாமல் யாரோ ஒரு பையனுடன் ஓடிப்போய் விட்டாள் என்றால், ஒட்டுமொத்தமாக அக்குடும்பமே பாதிக்கப்படுகிறது. ஆனால், கௌரவக் கொலைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறது. இப்பிரச்சினையை ஜாதிய ரீதியாக அல்லாமல் குடும்ப ரீதியான பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்" என்கிறார் பாலு.


வன்னிய சங்கத் தலைவர் மட்டுமல்ல, வேறு ஜாதிய சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில்கலப்புத் திருமண எதிர்ப்பு பிரச்சார இயக்கம்கடந்த மாதம் கரூரில் தொடங்கப்பட்டது.


எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வசதியான குடும்பத்துப் பெண்களைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைக்கின்றனர். காதல் திருமணம் முடிந்து, காவல் நிலையத்திற்கு பிரச்சினை வரும்போது, ‘அந்தப் பையன் வேண்டாம். அவன் தாழ்ந்த ஜாதிஎன்று பெண்களிடம் பெற்றோர்கள் கூறுகின்றனர். உடனே, ‘அந்த ஜாதியில் பிறந்தது அவரோட தவறா? ஜாதியில் என்ன இருக்கிறது. ஜாதியில், மேல் ஜாதி கீழ் ஜாதி என்றெல்லாம் கிடையாதுஎன்று பெண் பிள்ளைகள் பேசுகிறார்கள். ல்லி வைத்தாற்போல எல்லோருமே ஒரே மாதிரியாகப் பேசுகிறார்கள். சினிமா காதலைப் பார்த்து எங்கள் சமூகத்துப் பெண் பிள்ளைகள் ஏமாந்து போகின்றனர். கல்லூரி மாணவிகளிடம்தான் காதல் அதிகமாக உள்ளது. எனவே, அவர்களிடம் சென்று சமுதாய உணர்வை ஊட்டும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளோம்" என்கிறார் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் பொதுச்செயலாளரான வழக்கறிஞர் பழ. ஆனந்த்


தமிழ்நாடு பிராமணர் சங்கமும் கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதற்கான காரணங்களைக் கூறுகிறார் பிராமணர் சங்கத்தின் மாநிலத் தலைவர்தாம்ப்ராஸ்என்.நாராயணன்.
பிராமணர் சமூகப் பிள்ளைகள் கலப்புத் திருமணம் செய்வது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடந்தது. இப்போது அதிகமாகிவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் உலகமயமாக்கல். .டி. துறையில் பணிபுரிவோரிடம் நிறைய கலப்புத் திருமணம் நடக்கிறது. வேறு ஜாதிப் பையன்களை ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று பிராமணப் பெண்கள் சிலரிடம் கேட்டேன். எங்களுடன் பணிபுரிபவர்கள் வேறு ஜாதிப் பையன்களாக உள்ளனர் என்றும், பிராமணப் பையன்களைச் சந்திக்க தங்களுக்கு அதிகமான வாப்புகள் இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எங்கள் சமூகத்தைப் பொறுத்தளவில் பெண்கள்தான் அதிகமாக கலப்பு மணம் செய்து கொள்கின்றனர்" என்கிறார் நாராயணன்.


 கலப்பு மணம் கூடாது என்பதற்கு சில காரணங்களையும் அவர் கூறுகிறார். திருமணம் என்பது வாழ்க்கையின் துவக்கம். இளம் வயது பாலினக் கவர்ச்சியால் காதல் திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாடு எழுந்து மணமுறிவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. எங்களுக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை என்று இளம் வயதில் கூறுகிறார்கள். ஆன்மிகம், சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றில் சிறுவயதில் நம்பிக்கை இல்லாமல் போகலாம். ஆனால், பிற்காலத்தில் பிரச்சினை வருகிறது. எங்கள் சமுதாயத்தில் பையன்களைவிட திருமணத்திற்கான பெண்கள் குறைவாக உள்ளனர். இதை கவலையோடு பார்க்கிறோம். கலப்புத் திருமணத்தை எதிர்ப்பதற்கு உரிமை உள்ளது. அதேநேரத்தில், மற்றவர் மீது கசப்புணர்வோ, துவேசமோ கூடாது என்பது எங்கள் கருத்து" என்கிறார் நாராயணன்.


ஜாதிய அமைப்புகள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கலப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு வலுக்கும் அதேசமயம், கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.  

சென்னையில் கடந்த ஆண்டு பதிவு செயப்பட்ட திருமணங்களில் 10 சதவிகிதம் கலப்புத் திருமணங்கள்" என்கிறார் பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர்.


இன்னொருபுறம், ஜாதி ஒழிய வேண்டும் என்கிற உணர்வு கொண்ட தனி நபர்களும் சில அமைப்புகளும் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கின்றன.  

ஜாதி முறைக்கு அடித்தளமாக இருக்கும் அகமண முறையை உடைக்க வேண்டும் என்பதும், அதன் மூலம் ஜாதிய ஒடுக்குமுறை இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம்" என்கிறார் சரிநிகர் முற்போக்குத் திருமண இயக்கத்தைச் சேர்ந்த நீதிராஜன்.


சமூகத்தில் கலப்புத் திருமணங்கள் அதிகரித்து வரும் சூழலில், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் அல்லது ஆண்கள் கௌரவக் கொலை என்ற பெயரில் கொலை செய்யப்படும் சம்பவங்களும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. வேறு ஜாதிப் பையனை அல்லது பெண்ணைத் திருமணம் செவதால் ஜாதியின் கௌரவம் பாதிக்கப்படுகிறது என்கிற சிந்தனைப்போக்கு காரணமாக கௌரவக் கொலைகள் நடக்கின்றன


கடந்த பிப்ரவரி மாதம் (20.02.2012 அன்று) சிதம்பரம் நகரில் ஒரு பயங்கர சம்பவம். பி.. படிக்கும் மாணவி கங்கவள்ளி, ஜெராக்ஸ் கடையில் நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தார். அவரது அப்பா சுந்தரமூர்த்தி அங்கு வந்தார். தந்தைக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென கத்தியை எடுத்து மகளைக் குத்தினார் சுந்தரமூர்த்தி. அலறி சரிந்தார் அப்பெண். ‘வேறு ஜாதிப் பையனைக் காதலிக்கிறேன், அவரையே திருமணம் செதுகொள்வேன்என்று கங்கவள்ளி கூறியதே தந்தையின் கொலைவெறிக்குக் காரணம்.


இதுபோன்ற கௌரவக் கொலைகள் தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மதுரையில் இயங்கி வரும்எவிடென்ஸ்என்ற தன்னார்வ அமைப்பு தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள கௌரவக் கொலைகள் குறித்து ஆய்வு செய்துள்ளது. கௌரவக் கொலைகள் என்பது மூன்று விதமாக நடக்கின்றன. ஒன்று, காதலர்கள் அல்லது தம்பதியினர் இருவருமே கொலை செயப்படுகின்றனர். இரண்டு, பெண் மட்டும் கொலை செயப்படுகிறார். மூன்று, பெண்ணைக் காதலித்த அல்லது திருமணம் செய்துகொண்ட நபர் கொலை செய்யப்படுகிறார். கௌரவக் கொலைகள் என்பது மட்டுமல்ல, கௌரவ சித்ரவதைகளும் கௌரவ தற்கொலைகளும் கூட தமிழகத்தில் நடக்கின்றன" என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிர்


கௌரவக் கொலைக்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகவே கருத்து தெரிவித்துள்ளது. கலப்புத் திருமணம் என்பது தேச நலன் கொண்டது  என்று அது கருதுகிறது


நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு 2011ம் ஆண்டு அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அமர்வின் சார்பாக நீதிபதி கட்ஜு அத்தீர்ப்பை எழுதியுள்ளார்.

நம் நாட்டின் சாபக்கேடாக ஜாதிய முறை உள்ளது. ஜாதிய முறை விரைவில் ஒழிக்கப்படுவது நல்லது. நாட்டின் முன்பாக உள்ள பல சவால்களை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்நோக்க வேண்டிய சமயத்தில், ஜாதியானது நாட்டை கூறுகளாகப் பிரிக்கிறது. கலப்புத் திருமணம் என்பது தேசநலன் கொண்டது. அதன் மூலம் ஜாதிய முறை ஒழிக்கப்படும். ஜாதிய முறை என்பது ஒரு பிரிவினைவாத சக்தி. அது, கௌரவக் கொலை என்ற பெயரில் தன் ந்தக் குழந்தையையே கொலை செய்யத் தூண்டுகிறது. ஜனநாயக நாட்டில், சட்டப்படியான வயதை எட்டிய யார் வேண்டுமானாலும் அவர்களின் விருப்பத்தின்படி திருமணம் செய்துகொள்ள முடியும். கௌரவக் கொலையில் கௌரவம் எதுவும் இல்லை. அது காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான கொலை" என்று அத்தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


கௌரவக் கொலைக்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்" என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி கட்ஜு. கௌரவக் கொலைகள் என்பதுஅரிதிலும் அரிதானது’.  அது கொடுமையான, அநாகரிகமான செயல். கௌரவக் கொலைகளைத் தூண்டுவோர் அனைவரும் தங்களுக்குத் தூக்குமேடை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அக்குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். பொதுவாக, கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. நிலப்பிரபுத்துவ சிந்தனை கொண்டவர்களால் நடத்தப்படும் காட்டு மிராண்டித்தனமான கொலைகள் அவை" என்றும் அத்தீர்ப்பில் சாடியுள்ளது உச்ச நீதிமன்றம்.


இவ்வாறு சாடியதோடு மட்டும் நின்று விடவில்லை. ‘அத்தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்த அரசுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அதில், ‘கௌரவக் கொலைகள் நடப்பதைத் தடுக்கத் தவறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அச்சம்பவத்திற்குப் பொறுப்பாக்கி துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆனால், அந்த உத்தரவுக்குப் பிறகு நாட்டில் பல கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் அதுபோன்ற பல சம்பவங்கள் நடந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. நாகை மாவட்டம் வண்டல் கிராமத்தில் சித்ரா என்ற பெண் கௌரவக் கொலை செயப்பட்டுள்ளார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தும்கூட, உச்ச நீதிமன்ற வழிகாட்டல்படி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" என்கிறார் மிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ்


கலப்புத் திருமணம், கௌரவக் கொலை ஆகிய பிரச்சினைகளில் அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்கள் ஆகியோரின் செயல்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார்.

வட மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கௌரவக் கொலைகள் நடக்கின்றன என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கலப்புத் திருமணம் செபவர்களை அங்கீகரிக்கிற, ஊக்குவிக்கிற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது. அதுதவிர, அரசு சார்பில் கட்டப்படும் வீடுகள் ஒதுக்கீட்டில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம். மேலும், இதில் அரசுக்கு மட்டுமே முழுப் பொறுப்பு என்று ஒதுங்கிவிட முடியாது. இதில் சமுதாய இயக்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும்கூட கூடுதல் பொறுப்பு இருக்கிறது. சமத்துவ, ஜனநாயக உணர்வுகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது" என்கிறார் ரவிக்குமார்


பதவியையும் தேர்தலையுமே லட்சியமாகக் கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகள், அதற்காக சற்றும் வெட்கம் இல்லாமல் ஜாதிய அமைப்புகளோடு பகிரங்கமாகக் கூட்டணி வைத்துக்கொள்ளவும் தயங்காத அரசியல் கட்சிகளா அதைச் செய்யப் போகின்றன?  

இங்கு தேவை இன்னொரு பெரியார் !


-ஆ.பழனியப்பன்

நன்றி : புதிய தலைமுறை (14.06.2012)