Wednesday, 1 June 2011

புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?



தேர்தல் ஆணையத்தின் கண்டிப்போடும், அதன் கண்ணில் மண் தூவும் சாமர்த்தியத்துடனும்நடந்து முடிந்தது தேர்தல். இனி யாரோ ஒருவர் தலைமையில் ஆட்சி. 
யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் கவனம் சேலுத்த வேண்டிய பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன. புதிய ஆட்சி என்ன சேய வேண்டும்?
மின்சாரம், கல்வித்துறை, விவசாயம், வேலைவாப்பு ஆகிய உயிர்நாடியாகிய நான்கு முக்கியத் துறைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இங்கே சில கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்.
புதிய அரசு என்ன சேய வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்குகின்றனர் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள்.

மின்சாரம்: வெட்டு என்று விலகும்?
பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிற்துறையினர் என அனைத்துப் பகுதி மக்களையும் கடந்த மூன்றாண்டு காலமாக கடுமையாக பாதித்து வருகிறது மின்வெட்டுப் பிரச்சினை.
நமது மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு லட்சம் மின் இணைப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. அதனால், எட்டு சதவிகிதம் மின்சாரத் தேவை (சுமார் 500 மெகாவாட்) அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில் மின்சாரத் தேவையின் அளவு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தேவை அதிகரித்து வரும் நிலையில், தேவைக்கேற்ப மின்சார உற்பத்தி இல்லை. தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி சுமார் 3 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.
பற்றாக்குறையை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டது. வெளிமாநிலங்களின் மின்சார விலை அதிகரித்ததால், தொடர்ந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கும் அளவுக்கு மின் வாரியத்தின் நிதி நிலை பலமாக இல்லை. அதனால், மின்வெட்டு.
விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனால், அதற்கான பணத்தை மின்வாரியத்திற்கு அரசு கொடுப்பதில்லை. 5 ஆயிரம் கோடி ரூபாக்கும் மேல் பாக்கி உள்ளது. இதனால், மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது.
மின்சாரத் தேவையை பூர்த்தி சேய புதிய மின் திட்டங்கள் சேயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. அத்திட்டங்களால் உடனடிப் பலன் ஏற்படப்போவதில்லை. மேலும், புதிய திட்டங்களும்கூட தமிழகத்தின் மின்பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது என்கின்றனர் வல்லுநர்கள். அப்படியென்றால், நிரந்தரத் தீர்வுக்கு என்ன சேய வேண்டும்?
வல்லுநர் ஆலோசனை:
எம்.ஜி.தேவசகாயம்
(முன்னாள் தலைவர், ஹரியானா மின்சார வாரியம்)
மின்வெட்டுப் பிரச்சினைக்குகுறுகியகால மற்றும் நீண்டகாலத் தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியம். தற்போதைய பிரச்சினைக்கு முழு முதல் காரணம், தவறான நிர்வாகம்தான். அதை முதலில் சரிசேய வேண்டும். கோரிக்கை (ஈஞுட்ச்ணஞீ) என்பதற்கும், தேவை (‡ஞுஞுஞீ) என்பதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. தேவையின் அடிப்படையில் மின்சாரத்தை சப்ளை சேதால் பிரச்சினையே வராது. கோரிக்கை அடிப்படையில் சப்ளை சேவதால் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே இருக்கும், தீர்வே இருக்காது. தொழில்துறை, விவசாயத்துறை, குடியிருப்புகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் என்னென்ன தேவை என்பதை முழுமையாக ஆவு சேய வேண்டும். அந்த ஆவின் அடிப்படையில் மின்சாரத்தை சப்ளை சேதாலே முக்கால்வாசி பிரச்சினை தீர்ந்துவிடும்.
தமிழகத்தில் 30 சதவிகிதத்திற்கும் மேலாக மின்சார இழப்பு உள்ளது. அதை சரிசேவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மின்சாரம் வீணாவதைத் தடுப்பதற்கு, சிக்கனத்தின் மூலம் மின்சாரப் பாதுகாப்பு (ஞுணஞுணூஞ்தூ ஞிணிணண்ஞுணூதிச்ணாடிணிண)  மற்றும் மின்சார சேயல்திறன் (உணஞுணூஞ்தூ ஞுஞூஞூடிஞிடிஞுணஞிதூ) ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். துணை மின்நிலையங்களில் நவீனக் கருவிகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டுவர வேண்டும்.
தமிழக அரசு, விவசாயிகளுக்குக் கொடுக்கிற மானியத்தில் நடக்கிற குளறுபடிகள் சரிசேயப்பட வேண்டும். அரசின் மானியத்தால் மிகப் பெரிய நிலச்சுவான்தார்கள் பயனடைந்து வருகின்றனர். சாதாரண விவசாயிகள் மட்டுமே இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துவதை உறுதி சேய வேண்டும். இலவச மின்சாரத்துக்கான பணத்தை மின்வாரியத்துக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும்.
திறமையும், நேர்மையும் கொண்ட வல்லுநர்கள் அடங்கிய தன்னிச்சையான குழுவிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டும். அதில் எந்த வகையிலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கவே கூடாது.



தமிழகத்தில் கல்வித்துறையில் ஏகப்பட்ட குழப்பங்களும், குளறுபடிகளும் நிலவுகின்றன. நடப்பு கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. தற்போது சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இந்தப் பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என்று தனியார் பள்ளிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், இப்புத்தகங்களை ஏற்க மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இப்பிரச்சினையில் அரசு உறுதியான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்.
இன்னொரு பிரச்சினை, கல்விக் கட்டணம் தொடர்பானது. தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் சேவதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க நியமிக்கப்பட்ட ஓவு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரைகளை பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏற்க மறுத்தன. நீதிமன்றத்தை நாடின.
தனியார் பள்ளிகளின் மேல் முறையீட்டு மனுக்களை ஆவு சேது முடிவு எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், குழுத் தலைவர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா சேதார் கோவிந்தராஜன். அவர் ஏன் ராஜினாமா சேதார் என்ற மர்மம் நீடித்த நிலையில், ஓவு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியனை புதிய தலைவராக அறிவித்தது தமிழக அரசு.  தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி முடித்துவிட்டது ரவிராஜபாண்டியன் குழு. ஆனால், விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட மூன்று வாரங்களே உள்ள நிலையில், புதிய கட்டணங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மூன்றாவது முக்கிய விஷயம், கல்வி உரிமைச்சட்டம் (கீடிஞ்டணா ணாணி உஞீதஞிச்ணாடிணிண). இச்சட்டம் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், இப்படியொரு சட்டம் வந்திருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. மாணவர்களின் கல்வித்தரம் குறித்து அசார் ஆவு அறிக்கையில் ்தமிழ்நாட்டில் வாசிக்க முடிகிற, வகுத்தல் கணக்கை போடக்கூடிய குழந்தைகளின் சதவிகிதம் இந்திய சராசரியைவிட மிகவும் குறைவாக இருப்பதாகீ கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்த்து, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க புதிய அரசு என்ன சேய வேண்டும்?

கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிதாக வருகிற அரசு, தொலைநோக்குப் பார்வையுடன் சேயல்பட வேண்டும். சமச்சீர் கல்வியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வரும் தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள், தற்போது புதிய பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என்று குறை கூறுகின்றன. சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைந்து, பாடத்திட்டங்களில் உள்ள தவறுகளை அடுத்த ஆண்டில் சரிசேது, எந்தவித சமரசமும் இல்லாமல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை நிர்ணயம் சேவதற்கான குழு, ஒவ்வொரு பள்ளியிலும் பல்வேறு விஷயங்களை முழுமையாக ஆவு சேதபிறகே, கட்டணங்களை நிர்ணயம் சேதுள்ளது. எனவே, தனியார் பள்ளிகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல், அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை கறாராக அமல்படுத்த வேண்டும்.
சிறப்புக்கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு முழுமையாகச் சேன்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்வழிக் கல்வியை புதிய அரசு கொண்டுவர வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் புதிய அரசு நிறைவேற்ற வேண்டும்.
மருத்துவப் படிப்பிற்கு அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்று தமிழக அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. இதே நிலைப்பாட்டில் வரப்போகிற அரசும் உறுதியாக இருக்க வேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பொது நுழைவுத்தேர்வை ரத்து சேது, பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் முறையைத் தொடர வேண்டும். உயர்கல்வியைப் பொருத்தவரையில், பி.இ. தவிர வேறு படிப்பே இல்லை என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. பெரும்பாலான மாணவர்களின் கவனம் பி.இ. மீதுதான் இருக்கிறது. இந்த நிலையை வரப்போகிற அரசு மாற்ற வேண்டும். விவசாயத்தை அடிப்படையாக வைத்து பலவிதமான புதிய படிப்புகளைக் கொண்டுவரும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். கல்வியின் மூலமாக தமிழகத்தை ஒரு புரட்சிகரமான மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.



2006ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேலைவாப்பு அலுவலகங்களில் பதிவு சேதிருந்தவர்களின் எண்ணிக்கை 38 லட்சம். தற்போது 67 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஓர் ஆண்டிற்கு வேலைச்சந்தையில் வேலை தேடிவரும் இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம்.
வேலையின்மை பிரச்சினை மிக மோசமான அளவிற்கு அதிகரித்துள்ளது. சுமார் 3000 வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம் சேகிறார்கள். அரசு வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக மாறிவிட்டது.  தமிழக அரசுத்துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன.
குறிப்பாக, தலைமைச் சேயலகத்தில் 30 சதவிகிதத்திற்கும் மேலான பணியிடங்களும், வேலைவாப்பு அலுவலகங்களில் சுமார் 50 சதவிகித அளவிற்கும் காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தப் பணியிடங்கள் 670. அங்கு, 320 பணியிடங்கள் காலியாக உள்ளன. 
தனியார் துறைகளில் ஏராளமான வாப்புகள் இருந்தும் புதிய வேலைவாப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் அரசுத் தரப்பில் இல்லை. போட்டிகள் நிறைந்த சூழலில், தகவல் தொடர்புத் திறன் உள்ளிட்ட மென் திறன்களை இளைஞர்களிடம் வளர்த்தெடுக்க போதிய ஏற்பாடுகள் இல்லை. இதனால், கல்வித் தகுதிகள் இருந்தும்கூட நிறைய இளைஞர்களால் வேலைவாப்பை பெற முடியவில்லை.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வேலைவாப்புகளை உருவாக்கித் தந்திருக்க முடியும். ஆனால், கடந்த காலங்களில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அரசு வேலைவாப்பு அலுவலகம் என்பது வெறும் பதிவு அலுவலகமாகவே இருக்கிறது. நிறைய வேலைவாப்புகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ்கேரியர் சேன்டர்ீகளாக வேலைவாப்பு அலுவலகங்களை மாற்ற வேண்டும். வேலைவாப்புத் திறன், வேலை தேடும் திறன் போன்ற திறமைகளை இளைஞர்களிடம் வளர்த்தெடுப்பதற்கான மையங்களாக மாற்றுவது உள்ளிட்ட பெரிய சீரமைப்புகளைக் கொண்டுவர வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான தொழில் ஒப்பந்தங்கள் (–ணிக்) போடப்பட்டன. அவற்றில் பல திட்டங்கள் நடைமுறைக்கு வரவே இல்லை. ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் தொடங்க வைப்பதற்கான நடவடிக்கைக்கு புதிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை சரியாகவும், முழுமையாகவும் இயங்க வைக்க வேண்டும். இதனால், ஒவ்வொரு மண்டலத்திலும் சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு வேலைவாப்பு கிடைக்கும். அந்த வகையில் மட்டுமே, 1 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு வேலைவாப்பை வழங்கியிருக்க முடியும். வரப்போகிற அரசு இவ்விஷயத்தில் கவனம் சேலுத்த வேண்டும்.
அதிகமான வேலைவாப்புகளை அளிக்கக்கூடிய சிறுதொழில்கள் மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு தனிக் கொள்கை கொண்டுவரப்பட வேண்டும். அவர்களுக்கு எளிதாக கடன் வசதி கிடைக்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போல இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
சேன்னை - ஓசூர் சாலையை தொழிற்சாலைகள் நிறைந்த சாலையாக, அதாவது ஓர் என்ஜினீயரிங் சேன்டராக அதை மாற்ற முடியும். அதன் மூலம் லட்சக்கணக்கான வேலை வாப்புகளை உருவாக்க முடியும். இதுபோல நிறைய யோசனைகள் உள்ளன.
இளைஞர்களின் திறன் வளர்ப்புக்கான மத்திய அரசின் நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அந்த நிதியை வைத்து இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாப்பு பயிற்சிகளை அளித்திருக்க முடியும். வரப்போகிற அரசு, அந்த நிதியை மீண்டும் பெற்று இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும்.
முதல் ஓர் ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் வேலைவாப்புகளை உருவாக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ளவேண்டும்.


இன்றைக்குக் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள துறைகளில் முதன்மையானது வேளாண்மை. லாபகரமான தொழிலாக விவசாயம் இல்லை என்பது மட்டுமல்ல, அதற்காக சேலவு சேகிற பணத்தைக்கூட விவசாயிகளால் எடுக்க முடியவில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
கடந்த சில ஆண்டுகளில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. பல மணிநேர மின்வெட்டு காரணமாக, தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் தத்தளித்து வருகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. விவசாயிகளின் உழைப்பால் உற்பத்தி சேயப்பட்ட பொருட்களுக்கு அந்த விவசாயிகளாலேயே விலை நிர்ணயம் சேய முடியவில்லை. இத்தகைய மோசமான சூழலால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத் தொழிலைக் கைவிடும் ஆபத்து உருவாகியுள்ளது.
நகரங்களில் மட்டுமன்றி, கிராமப்புறங்களிலும்கூட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விவசாயம் சேவதைக் காட்டிலும் விவசாய நிலத்தை விற்பனை சேதால் நிறைய பணம் கிடைக்கிறது. விவசாயத்தால் லாபம் கிடைக்கவில்லை என்பதால், விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விற்பனை சேவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன. சாகுபடி பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது.
தேசியக் கிராமப்புற வேலை வாப்பு உறுதித்திட்டத்தின்கீழ் விவசாயம் அல்லாத பணிகள் எடுக்கப்படுகின்றன. இதனால், விவசாயப் பணிகளுக்குத் தேவையான தொழிலாளர்கள் கிடைப்பதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 
காகறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை சேமித்து வைப்பதற்கான குளிர்பதனக் கிடங்குகள் (இணிடூஞீ குணாணிணூச்ஞ்ஞுண்) தமிழகத்தில் இல்லை. இதனால், அந்தந்த சீசனில் விளைகிற காகறிகள், பழங்கள் போன்றவை பெருமளவில் அழுகி வீணாவதோடு, விவசாயிகளும் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே வேளாண் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் மாவட்ட, தாலுகா மையங்களில் வேளாண் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் விவசாயத்தை மீட்டெடுக்க புதிய அரசு என்ன சேய வேண்டும்?


சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் எடுக்கப்படுவதைத் தடை சேது சட்டம் கொண்டுவர வேண்டும். நிலத்தை 3 ஆண்டுகளுக்கு தரிசாகப் போட்டு, பின்னர் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்படுவதைத் தடுப்பதற்கும் சட்டம் கொண்டுவர வேண்டும். தரிசாக போடப்படும் நிலங்களை அரசே கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
கிராமப்புற வேலைவாப்பு உறுதித்திட்டத்தை வேளாண்மைக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் 100 நாள் உழைப்பு என்பதை 200 நாள் உழைப்பாக மாற்ற வேண்டும். ஆறுகளையும், நிலத்தடி நீரையும் பாதுகாப்பதற்காக, மணற்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் கூட்டுறவுக்கடன் கிடைப்பதை உறுதி சேய வேண்டும். சந்தைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் இயற்கை முறை விவசாயத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தைப் போல, வேளாண்துறையில் இயற்கை விவசாயத்திற்காக தனியாக கிளை தொடங்க வேண்டும். அதற்கு போதிய நிதி ஒதுக்கீடு சேய வேண்டும்.
அண்டை மாநிலங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக விவசாய அமைப்புகள் உள்ளடக்கிய அனைத்துக்கட்சி குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

Tuesday, 31 May 2011

வரவு எட்டணா.... செலவு ஏழணா...





-ஆ.பழனியப்பன்




அரசு நிர்வாகத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் மிக முக்கியமானது. ஒரு ரூபாதானேஎன்று அலட்சியம் காட்டக்  கூடாது. ஒவ்வொரு ரூபாயையும் பார்த்துப் பார்த்து செலவு செய்கிற அரசே, சிறந்த அரசாக இருக்க முடியும். மக்களின் தேவைகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும். கடன் வாங்காமலே செயலாற்ற முடியும்.
தேவையற்ற செலவுகளையும், தேவையற்ற திட்டங்களையும் குறைக்க வேண்டும். அதற்கான திறமைகளையும், பொறுப்புணர்வையும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் உருவாக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழலாம். நிச்சயம் இது சாத்தியமேஎன்பதை நிரூபித்து பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம். 
அரசு - பொதுமக்கள் கூட்டு முயற்சி’ (Public Public Partnerships - PUPs) என்கிற புதிய திட்டத்தின் மூலமாக, மக்களுக்கான குடிநீர் திட்டங்களை மக்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள் குடிநீர் வாரியப் பொறியாளர்கள். இத்திட்டத்தின் மூலமாக சுமார் 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கிறது குடிநீர் வாரியம். இந்த வெற்றியின் மூலமாக, உலகத்திற்கே வழிகாட்டும் திட்டமாக இது மாறியிருக்கிறது. அப்படி என்னதான் அவர்கள் செய்து விட்டார்கள்?
சுமார் 20 ஆண்டுகளாக அரசுத் துறைகளின் பல்வேறு திட்டங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது, அரசு-தனியார் கூட்டு முயற்சி (Public Private partnerships -PPP) என்று அழைக்கப்படுகிறது. அரசுத் துறைகள் என்றாலே, அங்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இருக்காது, நவீனத் தொழில்நுட்பங்கள் இருக்காது, நிர்வாகத் திறமை குறைவாக இருக்கும், லஞ்சம் ஊழல்கள் இருக்கும், நிதி விரயம் இருக்கும் என்கிற விமர்சனங்கள் பொதுவாகவே உண்டு. எனவே, நாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை தனியாருடன் கூட்டு சேர்ந்து நிறைவேற்றுவதுதான் சரியானது என்கிற கருத்தும் ஒரு சாராரிடம் உண்டு. அதேநேரத்தில், அரசின் செயல்பாடுகள் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டவை. தனியாரின் செயல்பாடுகள் என்பது லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை. எனவே, அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது சரியல்ல என்கிற வாதமும் இன்னொரு தரப்பால் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில்தான், தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிற அரசு-தனியார் கூட்டு முயற்சி என்கிற திட்டத்திற்கு மாற்றாக, ‘அரசு-பொதுமக்கள் கூட்டு முயற்சிஎன்கிற புதிய கான்சேப்ட் ஒன்று தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தில் இத்திட்டம் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
2004ம் ஆண்டு குடிநீர் வாரியத்திற்கு பெரும் சவால் மிகுந்த ஆண்டாக இருந்தது. அப்போது கடுமையான வறட்சி நிலவியது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்தது. நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் நிறைய குறைபாடுகள் இருந்தன. எனவே, தமிழ்நாட்டில் கடுமையான அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
அந்த நெருக்கடியை எப்படியாவது சமாளித்தாக வேண்டும் என்ற கட்டாயம் குடிநீர் வாரியத்திற்கு ஏற்பட்டது. குடிநீர் வாரியத்தின் பல திட்டங்களுக்கு உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் நிதியுதவி செய்து வருகின்றன. தண்ணீர் நெருக்கடியை சமாளிப்பதற்கு அவர்கள் சில யோசனைகளைத் தெரிவித்தார்கள். குடிநீர் வாரியத்தை பல பிரிவுகளாகப் பிரித்து தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அந்த யோசனைகளில் ஒன்று. ஆனால், அது நல்ல பலனைத் தராது. நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று கருதினர் குடிநீர் வாரியப் பொறியாளர்கள்.
அடிப்படையான பல மாற்றங்களை வாரியத்தில் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று பொறியாளர்கள் நினைத்தனர். வாரியத்தின் நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருவதற்காக ஓடெக் (ˆணூஞ்ச்ணடிண்ச்ணாடிணிணச்டூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணணா ச்ணஞீ உதுஞிஞுடூடூஞுணஞிஞு இணிணண்தடூணாச்ணணாண்  ˆஈஉஇ) என்ற அமைப்பை உதவிக்கு அழைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், மேலாண்மை வல்லுநருமான டாக்டர் வி.சுரேஷ் இந்த அமைப்பின் நிர்வாகி. முதல் நடவடிக்கையாக, ‘தண்ணீர் மேலாண்மையை ஜனநாயகப்படுத்துதல்’ (Democratisation of Water Management) என்கிற முயற்சி தொடங்கப்பட்டது.
"முதலில், வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் தொடர்பான சில பயிற்சிகள் வழங்கினோம். அதன் பிறகு, துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காகவும், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கூடுதல் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் புதுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் மூலமாக, துறைக்கு உள்ளேயே நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தோம். திட்டங்களை நிறைவேற்றுவதில் பொதுமக்களையும் பங்கேற்கச் செய்தோம். அந்தப் புதுமையான முயற்சி மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது" என்கிறார் டாக்டர் வி.சுரேஷ்.
தமிழகத்தின் 29 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டது.  முதலில், குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த சுமார் 160 பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது போன்ற விஷயங்களை முன்வைத்து பஞ்சாயத்துத் தலைவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தலித் மக்கள், இளைஞர் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் குடிநீர் வாரியப் பொறியாளர்கள் பணியாற்றினர்.
கிராமங்களில் பயிற்சி முகாம்கள், பயிலரங்குகள், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர்.  தண்ணீர் சிக்கனம், தண்ணீர் பாதுகாப்பு போன்றவற்றை மையமாக வைத்து வீதி நாடகங்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் உள்ளூரைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் ஆகியோரையும் பங்கெடுக்கச் செய்துள்ளனர். அரசுத் திட்டங்களைச் சேயல்படுத்துவதில் பொதுமக்களையும் பங்குதாரராக மாற்றுவது என்கிற மிகப் பெரிய மாற்றம் அங்கு நிகழ்ந்தது.
"புதிய குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட கிராம மக்களுடன் குடிநீர் வாரியப் பொறியாளர்கள் அமர்ந்து பேசுவார்கள். அங்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு, தண்ணீர்த் தேவை எவ்வளவு என்பன போன்ற விவரங்களை விவாதிப்பார்கள். மூன்று பம்புசேட்டுகள் போட்டால் 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தக் கூடிய தண்ணீர் ஆறு ஆண்டுகளுக்குள் தீர்ந்துவிடும். எனவே, மூன்றுக்குப் பதிலாக 2 பம்புசேட்டுகள் போடலாம் என்று கூறுவார்கள். அதேபோல, அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களுக்குப் பதிலாக, குறைந்த குதிரைத்திறன் மோட்டாரை பயன்படுத்தினால் நீண்டகாலத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்த முடியும் என்று கிராம மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். தண்ணீர் சிக்கனத்தின்முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட தஞ்சை, திருவாரூர் உட்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களுக்குப் புதிய திட்டங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டனர். பல கிராமங்களில் மக்கள் தாங்களாகவே முன்வந்து கண்மாய்களை ஆழப்படுத்தியும் இருக்கிறார்கள்" என்கிறார் ஓவுபெற்ற தலைமைப் பொறியாளர் ஒருவர்.
"குடிநீர் வாரியத்தில் பல திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. தேவையில்லாத பல திட்டங்கள் கைவிடப்பட்டன. அதன் மூலமாக நீர் ஆதாரம் அதிகரித்ததுடன், சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு அரசுப்பணம் மிச்சப்படுத்தப்பட்டது. இத்திட்டம் வெற்றியானதுடன் உலக அளவிலும் பிரபலம் அடைந்துள்ளது. இத்திட்டத்தின் அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக, தமிழ்நாடு குடிநீர் வாரிய பொறியாளர்களை அழைத்து ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களின் குடிநீர் வாரியப் அதிகாரிகள் விவாதித்தனர். இத்திட்டத்திற்கு ஐ.நா. மன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. தங்கள் நாட்டிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஸ்பெயின் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் என்னிடம் விவாதித்துவிட்டுச் சென்றுள்ளனர். சவுத் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்" என்கிறார் டாக்டர் வி.சுரேஷ்.
உலகத்திற்கு வழிகாட்டியாக மாறிவிட்ட இந்த முன்னோடித் திட்டத்தை, அனைத்துத் துறைகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க  வேண்டும். புதிய அரசு முன்வருமா?

நன்றி: புதிய தலைமுறை

பெட்ரோல் விலை




மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு?
இரு வாரங்களுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே மூச்சில் ஐந்து ரூபா உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உயர்வின் அதிர்ச்சியை இதற்குள் நீங்கள் ஓரளவு ஜீரணித்துக் கொண்டு மீண்டெழுந்திருக்கலாம். ஆனால், அவசரப்பட்டுஆறுதல் அடைய வேண்டாம். இன்னொரு விலை உயர்வு காத்திருக்கிறது. அநேகமாக அது உங்கள் வீட்டு காஸ் சிலிண்டருக்காக இருக்கலாம்.
இந்தக் கட்டுரையின் முதல் வரியில் உள்ள யை எழுதிக் கொண்டிருக்கும்போது (மே 23, பகல் 12:55) ஒரு சேதி வந்து முன் நிற்கிறது. புதுடில்லி’: ஏற்கெனவே பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையும் விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது. டீசல் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெ நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்க மத்திய அமைச்சரவையின் அமைச்சர்கள்குழு (உட்ணீணிதீஞுணூஞுஞீ எணூணிதணீ ணிஞூ –டிணடிண்ணாஞுணூண்  உஎணி–) இன்னும் இரண்டு தினங்களில் கூடி முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். டீசல் விலை லிட்டருக்கு 4 வரையிலும், சமையல் எரிவாயு விலை சிலிண்டர் ஒன்றுக்கு 25 வரையிலும் அதிகரிக்கும் என தெரிகிறதுஎன்கிறது  சேதி.
சமையல் எரிவாயுவின் விலை உயர்வது மட்டுமல்ல, அதற்கு வேறு சில கட்டுப்பாடுகளும் வரக்கூடும் என்ற ஊகங்கள் உலவுகின்றன  அதாவது, வீட்டு உபயோகத்திற்கு ஒரு வாடிக்கையாளருக்கு ஓராண்டுக்கு 4 அல்லது 5 சிலிண்டர்களை மட்டுமே விநியோகிப்பது என்றும், அதற்கு மேல் தேவைப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு சிலிண்டர்களைத் தாராளமாக வழங்குவது என்கிற முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், வெளிச்சந்தையில் விற்கப்படும் சிலிண்டருக்கு மானியம் அளிக்கப்படாதாகையால் அதன் விலை வீட்டுக்கு வழங்கப்படும் விலையைவிட பல மடங்கு கூடுதலாக இருக்கும். அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால் நடுத்தரக் குடும்பங்களின் நிலை மூச்சுத் திணறுவதாக ஆகிவிடும்.
தற்போது சேன்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 352 ரூபாயாக உள்ளது. 50 ரூபா உயர்த்தப்பட்டால், சிலிண்டரின் விலை 400 ரூபாயைத் தாண்டிவிடும். உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை தற்போது 1,288 ரூபாயாக உள்ளது. இதன் விலையும் மேலும் அதிகரிக்கும்.
 மே14ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்ட உடனேயே இது போன்ற சேதிகள் வரத் துவங்கி விட்டன. தில்லியிலிருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் டைம்ஸ்நாளிதழ் (மே, 16ம் தேதி) மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் இதே அளவிற்கு (லிட்டருக்கு 5 ரூபா) பெட்ரோல் விலை உயரும் என எண்ணெய் நிறுவன அதிகாரியை மேற்கோள் காட்டி ஒரு சேதி வெளியிட்டிருந்தது.
கடந்த ஓராண்டிற்குள், பெட்ரோல் விலை ஒன்பது முறை உயர்ந்து விட்டது. கடந்த 11 மாத காலத்தில் 15 ரூபா, அதாவது 32 சதவிகித அளவுக்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கயிறு அறுந்த கன்றுக் குட்டி மாதிரி பெட்ரோலியப் பொருட்களின் விலை கன்னாபின்னாவென்று எகிறக் காரணம் என்ன
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை பீப்பா ஒன்றுக்கு 110 டாலரை தொட்டுவிட்டது. இதனால், எண்ணெ நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுஎன்று காரணம் கூறுகிறது பெட்ரோலிய அமைச்சகம்.
இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று: சர்வதேசச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உள்ளூர் விலையை மாற்றி அமைக்கிறார்கள் என்றால், ஒன்பது தடவை விலை உயர்த்தப்படும்போது, ஒரு தடவையாவது விலை குறைந்திருக்க வேண்டும். ஏனெனில், எப்போதுமே சர்வதேசச் சந்தை ஏறுமுகமாக மட்டுமே இருந்ததில்லை. ஆனால், எப்போதும் சந்தை விலையில் உயர்வு மட்டுமே இருக்கிறது. குறைவு என்பது ஒருபோதும் இல்லை. இரண்டாவது கேள்வி: உண்மையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றனவா? 31.03.2010 நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஈட்டிய லாபம் (வரி சேலுத்திய பின்) 10 ஆயிரத்து 220 கோடி. அதற்குப் பின் வந்த 9 மாதங்களில் அதாவது 31.12.2010ல் அது ஈட்டிய லாபம் (வரிகளுக்குப் பின்) 3540 கோடி. இதே போல் இன்னொரு பெட்ரோலிய நிறுவனமான பாரத் பெட்ரோலியம், இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் 1537 கோடி. மற்றொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் லாபத்தில்தான் இயங்குகிறது. இவர்கள் நஷ்டம் நஷ்டம் எனச் சோல்வதெல்லாம் லாபத்தில் ஏற்படும் நஷ்டமே தவிர உண்மையான பண இழப்பல்ல.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் கடந்த ஆண்டு (ஜூன் 25, 2010) எண்ணெ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதனால், பெட்ரோல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என பிராணப் முகர்ஜி கூறுகிறார்.  
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை ஏற்கெனவே உயர்ந்து விட்ட போதிலும், பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை கடந்த ஜனவரியில் இருந்து எண்ணெ நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தனவாம். காரணம், தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலுக்கும் எண்ணெ நிறுவனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பிறகு எப்படி விலை உயர்வு முடிவை நிறுத்திவைக்கப்பட்டது? பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெ நிறுவனங்களுக்குப் போவிட்டாலும், மத்திய அரசின்கட்டுப்பாட்டில்தானே பொதுத்துறை எண்ணெ நிறுவனங்கள் இயங்குகின்றன. பின்புறமாக சாவியைக் கொடுத்துவிட்டு, எண்ணெ நிறுவனங்கள்தான் விலையை முடிவு சேகின்றன என்று தனது பொறுப்பை சுலபமாகத் தட்டிக்கழிக்கிறது மத்திய அரசு. 
சரி, சர்வதேசச் சந்தையுடன் பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்புபடுத்தி வைக்கப்படும் வாதம் சரிதானா?
"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை உயர்வதையும், உள்நாட்டுச் சந்தையில் எண்ணெ விலை உயர்த்தப்படுவதையும் முடிச்சுப்போடுவது அபத்தமானது" என்று சாடுகிறார் பிரபல பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ்.
"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை நிலையில்லாமல் (ஙணிடூச்ணாடிடூஞு ண்டிணாதச்ணாடிணிண) இருப்பதற்கு ஊக வணிகமே காரணம். அங்கு நிலையில்லா தன்மை என்பது சேயற்கையாக உருவாக்கப்படுகிறது. சர்வதேசச்சந்தையில் கச்சா எண்ணெ விலை உயர்ந்தால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை இங்கு உயர்த்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கச்சா எண்ணெ இறக்குமதி மீதான கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வையைக் குறைத்தாலே பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. அதைப்போல, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை மத்திய அரசு குறைத்தால் விலை உயர்வுக்கு அவசியம் இருக்காது. ஆனால், இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தயாராக இல்லை" என்கிறார் ஜெயதி கோஷ்.
இந்த வாதம் எவ்வளவு தூரம் சரியானது?
கடந்த நிதியாண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை பீப்பா ஒன்றுக்கு (160 லிட்டர்கள்) 69.76 டாலர்களாக இருந்தது. அப்படியென்றால், ஒரு லிட்டர் கச்சா எண்ணெ விலை 0.43 டாலர்கள். அதாவது 19.62. எண்ணெ சுத்திகரிப்பு நிலையங்களின் சேலவில் 90 சதவிகிதம் கச்சா எண்ணெக்குரியது என்கிறது பரீக் கமிட்டியின் அறிக்கை. அதைக் கணக்கில்கொண்டால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளிவரும் கச்சா எண்ணெயின் விலை லிட்டருக்கு 21.58 ஆக இருக்கும். இது வரி விதிப்புக்கு முந்தைய நிலை. பெட்ரோல் விற்கப்படும் விலையில் 21.58 விலக்கிவிட்டால் மீதி அனைத்தும் வரிகள் உள்ளிட்ட வசூலிப்புகள்தான்.
ஒட்டுமொத்தமாக, பெட்ரோல் விலையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வரிகளாகவே வசூலிக்கப்படுகின்றன. எல்லா  நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஆனால், ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன.
பெட்ரோல் விலை உயர்த்தப்படும் போதெல்லாம் விற்பனையில் ஏற்படும் இழப்பை அரசு மானியங்கள் கொடுத்து ஈடுசேது வருகிறது. எனவே, விலை உயரும்போது மானியத்தின் அளவும் உயர்கிறது. அதைத் தவிர்க்க விலை உயர்த்தப்படுகிறது என்றொரு கருத்து சோல்லப்படுவதுண்டு. ஆனால், அது ஒரு கண் துடைப்பு வாதம் என்பதை அரசின்புள்ளி விவரங்களில் இருந்தே புரிந்துகொள்ள முடியும்.
 "2009-2010ம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மத்திய அரசின் கஜானாவிற்கு பெட்ரோலியத்துறை மூலமாக 56365 கோடி ரூபா போச் சேர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் எண்ணெ வியாபார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணெப் பத்திரங்கள் (ˆடிடூ ஆணிணஞீண்) உட்பட அரசால் வழங்கப்பட்ட மானியம் 14058 கோடி. அதாவது, வரிகள் உட்பட பெட்ரோலியத்துறையின் பங்கு 25 சதவிகிதம். எனவே, வரிகளாக மக்கள் கொடுப்பது 100 ரூபா. மானியம் என்ற பெயரில் அரசு கொடுப்பது 25 ரூபா. இதில் கொடுமை என்னவென்றால், கடுமையான பணவீக்க காலத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி, கச்சா எண்ணெ மீதான இறக்குமதி வரி ஆகியவற்றை உயர்த்தியதன் மூலமாக 30 ஆயிரம் கோடி ரூபா கூடுதல் வருவாயை அரசு ஈட்டியது. இந்த வகையில் 2010-2011ம் ஆண்டில் மானியத்தை 20 சதவிகிதமாக அரசு குறைத்துவிட்டது. உண்மை என்னவென்றால், 2001ம் ஆண்டில் பெட்ரோலியத்துறை மூலம் அரசுக்குக் கிடைத்த வருவா 46603 கோடி. இது, 2008-2009ம் ஆண்டில் 93513 கோடியாக உயர்ந்தது" என்கிறார் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் சேவதற்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் திபங்கர் முகர்ஜி.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியம் பணமாகக் கொடுக்கப்படுவதில்லை. அரசின் கடன் பத்திரங்களாக வழங்கப்படுகின்றன. அவற்றை சந்தையில் விற்று, எண்ணெய் நிறுவனங்கள் பணமாக மாற்றிக் கொள்கின்றன.  அதாவது, அரசின்கையில் இருந்து சல்லிக் காசு மாறுவதில்லை.
வரிகள் விலையின் மீது சதவிகிதத்தில் விதிக்கப்படுவதால் பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் அரசின் வருவா அதிகரிக்கிறது என்பதுதான் உண்மை. அரசுக்கு வரிகள் மூலம் மட்டுமல்ல, வேறு வழிகளிலும் பெட்ரோலியத் துறை வருவா ஈட்டித் தருகிறது. ஓர் உதாரணம், பெட்ரோல் சுத்திகரிப்பு.
இந்தியாவில் 20 முதல் 30 சதவிகிதம் வரை சர்வதேசச் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் கச்சா எண்ணெ கிடைக்கிறது. அதேபோல், இந்தியாவின் எண்ணெ சுத்திகரிப்புத் திறன், உள்நாட்டுத் தேவையைவிட மிக அதிகம். நாட்டின் இப்போதைய சுத்திகரிப்புத் திறன் 182.09 எம்எம்டி. (வரும் நிதியாண்டில் இது 255.83 எம்எம்டியாக உயரும் என மதிப்பிட்டிருக்கிறது திட்டக் குழு) உள்நாட்டு நுகர்வு 138.196 எம்எம்டி.
கை வசம் உபரியாக உள்ள திறனைப் பயன்படுத்தி இந்தியா பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி சேது வருகிறது. 2009-2010 நிதியாண்டில் 50.97 மில்லியன் மெட்ரிக் டன்(எம்எம்டி) பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி சேயப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் 23.49 எம்எம்டி அளவுக்குத்தான் இறக்குமதி நடந்திருக்கிறது.
சரி, பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலையில் உயர்வு ஏற்பட்டால், உள்நாட்டில் விலையை உயர்த்தாமல், பற்றாக்குறையை சரிக்கட்டுவதற்கு மத்திய அரசிடம் எண்ணெத் தொகுப்பு நிதி (ˆடிடூ கணிணிடூ) இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தொகுப்பு நிதி கலைக்கப்பட்டுவிட்டது. மீண்டும் அதுபோன்ற ஏற்பாட்டை அரசு சேயுமானால் பெட்ரோல் விலை உயர்வுக்கு அவசியம் ஏற்படாது" என்கிறார் பொருளாதார வல்லுநர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா.
"எண்ணெய்த் தொகுப்பு நிதி போன்ற ஏற்பாடுகள் இப்போது பயனளிக்காது" எனக் கருதுகிறார் ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்பத்திரிகையின் கன்சல்டிங் எடிட்டர் சுசீலா ரவீந்திரநாத். "நம் நாட்டில் கார், பைக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. எனவே, எண்ணெ நுகர்வும் அதிகரித்துக்கொண்டே சேல்கிறது. பொதுப்போக்குவரத்தை அதிகரிக்காத வரையில் எண்ணெ நுகர்வு மேலும் உயர்ந்து கொண்டுதான் சேல்லும். மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்தினால் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்" என்கிறார் அவர்.
"நாம் கச்சா எண்ணெ இறக்குமதி சேது, அதை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களாக ஏற்றுமதி சேகிறோம். அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மானியமாகக் கொடுத்தாலே பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்" என்கிறார் பத்திரிகையாளர் வே.மீனாட்சி சுந்தரம். அவர் மேலும் சில யோசனைகளைப் பட்டியலிடுகிறார்:
குபெட்ரோலியப் பொருட்களின் விலையில் சரி பாதியாக வரி உள்ளது. விமானப் போக்குவரத்திற்கு பயன்படும் எரிபொருளுக்கு விலையை குறைத்தது போல, மற்ற பெட்ரோலியப் பொருள்களுக்கும் வரிகள் குறைக்கப்பட வேண்டும்.
குஉள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலியப் பொருட்களுக்கு சர்வதேச விலையை நிர்ணயிக்கக் கூடாது.
குசந்தை விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
குஉள்நாட்டு பெட்ரோலியக் கச்சா உற்பத்தியை பெருக்க வேண்டும். நவீனத் தொழில் நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்காத வகையில் அந்த உற்பத்தி முறை இருக்க வேண்டும்.
ஏதோ ஒரு வகையில் இதற்குத் தீர்வு கண்டாக வேண்டும். ஏனெனில், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு என்பது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஏதோ கார், பைக் ஓட்டுகிறவர்களின் பிரச்சினை மட்டுமல்ல. பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால் காகறியிலிருந்து கட்டுமானப் பொருட்கள் வரை எல்லாவற்றின் விலையும் எகிறும் என்பதுதான் யதார்த்தம்.  

பணியிடங்களில் செக்ஸ் டார்ச்சர்... ஏன் தடுக்க முடியவில்லை?






பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் அவ்வப்போது எழுவதுண்டு. சன் டி.வி. நியூஸ் எடிட்டர் ராஜா தமக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று காவல்துறையிடம் புகார் அளித்தார் செய்தி வாசிப்பாளர் அகிலா. அதையடுத்து, சிறையிலடைக்கப்பட்டார் ராஜா. 

தற்போது, ஜாமீனில் வெளிவந்த ராஜா, அதே நிறுவனத்தில் அதே பொறுப்பில் தொடர்கிறார். ஆனால் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் அகிலா. இது குறித்து விளக்கம் கேட்டு சன் டி.வி. நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் மாதர் சங்கம் அறிவித்துள்ளது. 

பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் பொதுவாக வெளியே வருவதில்லை. வெளியே வரும் பிரச்சினைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

இப்பிரச்சினை குறித்த ஓர் அலசல். 


ரோடு மாவட்டத்தில் வசித்து வரும் 41 வயதாகும் வள்ளி, கடந்த 14 ஆண்டுகளாகக் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதாகவும், அதற்கு சம்மதிக்காததால் பல பின்விளைவுகளை தாம் சந்தித்ததாகவும் வழக்கில் குறிப்பிட்டுள்ளார் வள்ளி.

காவல்துறையினரைப் பற்றிப் புகார் சொல்ல வேண்டுமென்றால்  பொதுவாக எல்லோருக்கும் தயக்கம் இருக்கும். அப்படி இருக்கும்போது,  காவல்துறையில் பணிபுரிவோர் தங்கள் மேலதிகாரிகளைப் பற்றி புகார் கூற துணியமாட்டார்கள். ஏனெனில், காவல்துறையினர் நினைத்தால் ஒருவரைத் தண்டிக்க இயலுமோ, இல்லையோ நிச்சயம் துன்புறுத்த முடியும். அதற்குப் பயந்தே பலர் மௌனமாக இருந்துவிடுவதுண்டு. அப்படியிருக்க ஒரு பெண், அதுவும் கீழ்நிலையில் உள்ள காவலர், நீதி கேட்டு நீதிமன்றத்தின் படியேறிருக்கிறார். அப்படியென்றால், நிலைமை நிச்சயம் மோசமானதாகத்தான் இருக்க வேண்டும். வள்ளி வெறும் குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு நின்றுவிடவில்லை.

"பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி கமிட்டி அமைக்கப்பட்டதா என்று கேட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கு 24.12.10 அன்று கடிதம் எழுதினேன். அதைத் திரும்பப் பெறும்பாறு வற்புறுத்துகிறார்கள். அதே கேள்வியுடன், டி.ஜி.பி. லத்திகா சரணுக்கும் 28.02.11 அன்று கடிதம் ஒன்றை எழுதினேன். பெண்ணாக இருக்கும் அவர் கூட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றக் கூறும் எனது கடிதத்தை பரிசீலிக்கவில்லை. பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்கவும், விசாரணை நடத்தவும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று 1997ம் ஆண்டு விசாகா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைப் பின்பற்றி காவல் நிலையங்கள்மாவட்டக் காவல் அலுவலகங்கள்தலைமை காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைத்துக் காவல் அலுவலகங்களிலும் கமிட்டிகள் அமைக்க மாநிலக் காவல்துறை தலைவருக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வள்ளி கேட்டுக்கொண்டுள்ளார்.

அது என்ன விசாகா வழக்கு?

ராஜஸ்தானில் மாநில அரசின் வளர்ச்சித்திட்டம் ஒன்றில் கிராமப் பணியாளராகப் பணியாற்றி வந்தார் பன்வாரி தேவி. அம்மாநிலத்தில் குழந்தைத் திருமணங்களுக்கு மாநில அரசு தடை விதித்திருந்தபோதிலும், குழந்தைத் திருமணங்கள் அங்கு சர்வ சாதாரணமாக நடைபெற்றன. பன்வாரி பணியாற்றிய பகுதியில் குழந்தைத் திருமணங்கள் எதுவும் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து தகவல் செல்லும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டு ராம்கரன் குஜ்ஜார் என்ற  ஒருவரது குடும்பத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறவிருந்தது. அதை அரசுக்குத் தெரிவித்து தடுத்து நிறுத்தினார் பன்வாரி. 


அதனால், ராம்கரன் குஜ்ஜாரும் அவரது உறவினர்களும் கடும் கோபம் அடைந்தனர். ராம்கரன் குஜ்ஜார் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், பன்வாரி தேவியை அவரது கணவரின் கண் எதிரிலேயே கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்தனர். அது குறித்து பன்வாரி அளித்த புகாரை வாங்குவதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர். அதனால், இரவு முழுவதும் காவல் நிலையத்தின் வாசலிலேயே சத்யாகிரகம் செய்தார் பன்வாரி. விடியற்காலையில் மக்கள் கூடி பன்வாரிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விஷயம் ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகு அவரது புகாரைப் பெற்றுக்கொண்டது காவல்துறை. ஆனாலும், பன்வாரிக்கு நீதி கிடைக்கவில்லை. 

அதையடுத்து, பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக சில உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ‘விசாகா’ என்ற பெயரில் சில பெண்கள் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதன் விளைவாக 1997ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியன்று உச்சநீதிமன்றம் சில வழிகாட்டல்களை அளித்தது.

பணியிடங்களில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசுதல், ஆபாசமான பாடல்களைப் பாடுதல், ஆபாசமான படங்களைக் காண்பித்தல், வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலமான ஆபாச  நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை பாலியல் வன்முறைகள் என்று உச்சநீதிமன்றம் வரையறை செய்தது. பாலியல் ரீதியான வன்முறையற்ற பணிச்சூழலை உருவாக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 
முக்கியம் அம்சங்கள் சில:

பத்துப் பெண்கள் அல்லது அதற்கு மேல் பெண்கள் பணிபுரியும் இடங்களில் கண்காணிப்புக் கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும்.  
அந்த கமிட்டியின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட வேண்டும். அதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாக இருக்க வேண்டும். அந்த நிறுவனத்தைச் சாராத ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பின் பிரதிநிதி ஒருவர் வெளியாளாக அந்தக் குழுவில் இடம் பெற வேண்டும்.

புகார்கள் மீதான விசாரணையை இந்த கமிட்டி விசாரித்து, குற்றம் நடந்திருக்கக் கூடும் எனக் கருதினால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். புகார் கொடுக்கும் காரணத்தால் பாதிக்கப்பட்ட பெண் மீது பழிவாங்கும் நடவடிக்கை போன்றவை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கு இந்த வழிகாட்டல்களின்படி அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்ப்பு கூறப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டு காலத்தில் அரசு அலுவலகங்களிலோ, தனியார் பணியிடங்களிலோ உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்களின் படி புகார் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? அமைக்கப்பட்டுள்ள கமிட்டிகள் சிறப்பாகச் செயல்படுகின்றனவா?

“இன்சூரன்ஸ், பொதுத்துறை வங்கிகள், தொலைத்தொடர்புத்துறை, ரயில்வே, தபால் தந்தி, வருமான வரித்துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் புகார் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுத் துறைகளைப் பொருத்தவரையில், பல அலுவலகங்களில் புகார் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து அலுவலகங்களிலும், அனைத்துத் துறைகளிலும் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. காவல்துறை, நீதித்துறை போன்றவற்றில் புகார் கமிட்டிகள் இல்லை. 
"அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாலியல் புகார் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட உயரதிகாரியைச் சந்தித்து சமீபத்தில் வலியுறுத்தினோம். ஆனால் அவர், ‘எந்த இடத்தில் கமிட்டி இல்லை என்று சொல்லுங்கள், அமைத்து விடுகிறோம்என்று சொன்னார். உடனே நாங்கள், ‘எத்தனை இடங்களில் கமிட்டி அமைத்திருக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லுங்கள்என்று கேட்டோம். அதற்கு அவரிடம் பதில் இல்லை" என்றார் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் (சி.ஐ.டி.யு.) மாநில அமைப்பாளர் மாலதி சிட்டிபாபு.  

 "விசாகா தீர்ப்பு வந்த பிறகு, தமிழ்நாட்டில் நீதிமன்றங்களில் பணியாற்றும் அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் செய்வதற்கான ஏற்பாடு வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அப்போதைய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் மனுக் கொடுத்தோம். அதற்கு அவர், ‘நீதிமன்றத்தில் ஆண்களும் பெண்களும் பிரச்சினையின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். விசாகா தீர்ப்பு வந்த பிறகுதான், பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. இப்போது பெண்கள் தங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் வருவதாக புகார் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்என்று சொன்னார் தலைமை நீதிபதி. அவரது கருத்து எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது" என்றார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நாகஷைலா.

பல இடங்களில் புகார் வந்த பிறகுதான் கமிட்டியே அமைக்கிறார்கள். அமைக்கப்பட்ட கமிட்டிகளும் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. பெரும்பாலான கமிட்டிகள் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்களின்படி அமைக்கப்படவில்லை. பெரும்பாலும் அதிகாரிகளே கமிட்டிகளில் இடம் பெற்றுள்ளனர். கமிட்டியில் 50 சதவிகித உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்றும், என்.ஜி.ஓ.வை சேர்ந்த ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் விசாகா வழிகாட்டலில் உள்ளது. 
 கமிட்டியில் 50 சதவிகிதம் பெண்கள் இருந்தால் மட்டுமே போதாது.  பாலியல் பிரச்சினை குறித்த சரியான பார்வை கொண்டவராகவும், சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடியவராகவும் அவர்கள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அப்படியெல்லாம் பார்த்து கமிட்டி அமைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கவே செய்கிறது. 
சரி, புகார் கமிட்டிகள் உள்ள இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வருகிறார்களா என்று, வணிகவரித்துறையில் உள்ள புகார் கமிட்டியின் பெண் உறுப்பினர் ஒருவரிடம் கேட்டோம்.

"பொதுவாகவே, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளன. ஆனால், அந்தப் பிரச்சினைகள் வெளியே வருவது இல்லை. ஏனென்றால், பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தால், அந்தப் பெண் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நான் உறுப்பினராக இருக்கும் புகார் கமிட்டியில் இதுவரை ஒரு புகார் கூட வந்தது இல்லை. அதற்காக பாலியல் தொல்லைகளே இல்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்ய முன்வராததற்குப் பல காரணங்கள் உண்டு" என்றார் அவர்.

புகார் கொடுக்கும் பெண்ணுக்கு நியாயம் கிடைப்பதில்லை என்பது மட்டுமல்ல, அவர் வேறு பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார். வெளியில் தெரிந்தால் உனக்குத்தான் அசிங்கம், புகாரை வாபஸ் வாங்கிவிடுஎனப் புகார் கொடுத்த பெண்ணையே மிரட்டும் போக்குதான் உள்ளது. அதற்குப் பின்னும் அவர் புகாரை வாபஸ் வாங்காவிட்டால், அவர் தனிமைப் படுத்தப்படுவார். அவரது வேலைச் சுமை அதிகரிக்கும். வேறு பல விதங்களிலும் அவர் பழிவாங்கப்படுவார். 

"தமிழக அரசுத்துறை ஒன்றில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கு அவரது மேலதிகாரி தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண், புகார் கமிட்டியில் புகார் கொடுத்துவிட்டார். புகாரை வாபஸ் வாங்குமாறு கமிட்டியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். விளைவு என்ன தெரியுமா? அந்தப் பெண்ணிடம் யாரும் பேசக் கூடாது என்று அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் மிரட்டப்பட்டனர். அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் மீது கூடுதலான வேலைகள் திணிக்கப்பட்டன. மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அலுவலக வேலைகளை அவரால் செய்துமுடிக்க முடியவில்லை. அவருக்கு ஒரே மாதத்தில் 30 மெமோக்கள் கொடுக்கப்பட்டன. பழிவாங்கலைத்  தாக்குப் பிடிக்க முடியாமல் அப்பெண் மனமுடைந்து போனார். கடைசியில், இப்பிரச்சினையில் மகளிர் ஆணையம் கூட தலையிட்டது" என்றார் வேளாண் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர். 


இதே போல பழிவாங்கும் நோக்கத்தோடு பெண் காவலர் ஒருவர் மாத விலக்கு நாளன்று தொடர்ந்து நான்கு மணி நேரம் நின்றுகொண்டே இருக்குமாறு பணிக்கப்பட்டாராம்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் அது குறித்து முறையிடுவதற்கு இங்கு கமிட்டி இருக்கிறது என்பது அந்த அலுவலகத்தில் பணி புரிவோருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது எங்குமே நடப்பதில்லை. 

"அரசுத்துறைகளில் பல இடங்களில் பெயரளவுக்காவது புகார் கமிட்டிகள் உள்ளன. ஆனால், ‘புகார் கமிட்டியா, அப்படீன்னா என்ன?’ என்று கேட்கின்றன தனியார் நிறுவனங்கள். தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமான தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கு ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை செய்கின்றனர். அங்கெல்லாம் புகார் கமிட்டிகள் இல்லை. தனியார் நிறுவனங்களில் புகார் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை என்றாலும், அங்கே தொழிற்சங்கங்கள் இருப்பதால் அதன் மூலம் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வைக்க முடிகிறது. ஆனால், சாஃப்ட்வேர் நிறுவனங்கள் மாதிரியான பணியிடங்களில் அதற்கும்கூட வாய்ப்பில்லை" என்கிறார் மாலதி சிட்டிபாபு.

தனியார் நிறுவனங்களில் இது போன்ற கமிட்டிகள் இல்லாததற்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களைப் பாதுகாப்பதற்கென்று சட்டங்கள் இல்லை. 1997லேயே உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த போதும், அவற்றின் அடிப்படையில் மாநில, மத்திய அரசுகள் சட்டமியற்ற வேண்டும் எனச் சொல்லியிருந்த போதும், ஒன்பது ஆண்டுகளுக்கு ஒன்றுமே நடக்கவில்லை. 

பெண்கள் அமைப்புக்களின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பின் 2006ம் ஆண்டு சட்ட வரைவு ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் விசாகா தீர்ப்பில் கூறப்பட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பல இடம் பெறவில்லை. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜே.எஸ். வர்மாவே இதைக் குறிப்பிட்டு அந்த வரைவை விமர்சித்தார்.பல மாற்றங்களுக்குப் பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேறொரு சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் பணியாற்றுகிற பெண்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வாடிக்கையாளராகவோ, பயிற்சியாளராகவோ, தினக்கூலியாகவோ அங்கு வருகிற பெண்களுக்கும் இச்சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆகியோருக்கும் இச்சட்டம் பொருந்தும். அமைப்புசாரா துறைகளில் பணியாற்றுவோரும் இச்சட்டத்தின் கீழ் வருகிறார்கள். இச்சட்டத்தில் கூறப்படும் விஷயங்களை நிறைவேற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது முதலாளி 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று மசோதாவில் உள்ளது. உரிய ஆதாரங்களுடன் புகாரை நிரூபிக்கத் தவறினால், புகார் அளிக்கும் பெண்ணுக்கு தண்டனை உண்டு என்கிற ஒரு அம்சம் இந்த மசோதாவில் உள்ளது. இது இன்னமும் சட்டமாகவில்லை.

சட்டம் மாத்திரம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. கலாசார ரீதியாகவும் சில மாற்றங்கள் நேர வேண்டும். பெண்களை ஒரு போகப் பொருளாக மட்டும் பாராமல், ஒரு சகஜீவியாகப் பார்க்கும் மனோபாவம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதில் குடும்பம், வகுப்பறைகள், ஊடகங்கள் உள்பட பலவற்றிற்கும் பங்கு உண்டு. சமூகம் அதை நோக்கி நடக்கிறதா, இல்லையா என்பதுதான் நிஜமான பிரச்சினை.

-ஆ.பழனியப்பன்

நன்றி: புதிய தலைமுறை