பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் அவ்வப்போது எழுவதுண்டு. சன் டி.வி. நியூஸ் எடிட்டர் ராஜா தமக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று காவல்துறையிடம் புகார் அளித்தார் செய்தி வாசிப்பாளர் அகிலா. அதையடுத்து, சிறையிலடைக்கப்பட்டார் ராஜா.
தற்போது, ஜாமீனில் வெளிவந்த ராஜா, அதே நிறுவனத்தில் அதே பொறுப்பில் தொடர்கிறார். ஆனால் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் அகிலா. இது குறித்து விளக்கம் கேட்டு சன் டி.வி. நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் மாதர் சங்கம் அறிவித்துள்ளது.
பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் பொதுவாக வெளியே வருவதில்லை. வெளியே வரும் பிரச்சினைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை.
இப்பிரச்சினை குறித்த ஓர் அலசல்.

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் 41 வயதாகும் வள்ளி, கடந்த 14 ஆண்டுகளாகக் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதாகவும், அதற்கு சம்மதிக்காததால் பல பின்விளைவுகளை தாம் சந்தித்ததாகவும் வழக்கில் குறிப்பிட்டுள்ளார் வள்ளி.
காவல்துறையினரைப் பற்றிப் புகார் சொல்ல வேண்டுமென்றால் பொதுவாக எல்லோருக்கும் தயக்கம் இருக்கும். அப்படி இருக்கும்போது, காவல்துறையில் பணிபுரிவோர் தங்கள் மேலதிகாரிகளைப் பற்றி புகார் கூற துணியமாட்டார்கள். ஏனெனில், காவல்துறையினர் நினைத்தால் ஒருவரைத் தண்டிக்க இயலுமோ, இல்லையோ நிச்சயம் துன்புறுத்த முடியும். அதற்குப் பயந்தே பலர் மௌனமாக இருந்துவிடுவதுண்டு. அப்படியிருக்க ஒரு பெண், அதுவும் கீழ்நிலையில் உள்ள காவலர், நீதி கேட்டு நீதிமன்றத்தின் படியேறிருக்கிறார். அப்படியென்றால், நிலைமை நிச்சயம் மோசமானதாகத்தான் இருக்க வேண்டும். வள்ளி வெறும் குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு நின்றுவிடவில்லை.
"பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி கமிட்டி அமைக்கப்பட்டதா என்று கேட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கு 24.12.10 அன்று கடிதம் எழுதினேன். அதைத் திரும்பப் பெறும்பாறு வற்புறுத்துகிறார்கள். அதே கேள்வியுடன், டி.ஜி.பி. லத்திகா சரணுக்கும் 28.02.11 அன்று கடிதம் ஒன்றை எழுதினேன். பெண்ணாக இருக்கும் அவர் கூட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றக் கூறும் எனது கடிதத்தை பரிசீலிக்கவில்லை. பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்கவும், விசாரணை நடத்தவும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று 1997ம் ஆண்டு விசாகா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைப் பின்பற்றி காவல் நிலையங்கள், மாவட்டக் காவல் அலுவலகங்கள், தலைமை காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைத்துக் காவல் அலுவலகங்களிலும் கமிட்டிகள் அமைக்க மாநிலக் காவல்துறை தலைவருக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வள்ளி கேட்டுக்கொண்டுள்ளார்.

அது என்ன விசாகா வழக்கு?
ராஜஸ்தானில் மாநில அரசின் வளர்ச்சித்திட்டம் ஒன்றில் கிராமப் பணியாளராகப் பணியாற்றி வந்தார் பன்வாரி தேவி. அம்மாநிலத்தில் குழந்தைத் திருமணங்களுக்கு மாநில அரசு தடை விதித்திருந்தபோதிலும், குழந்தைத் திருமணங்கள் அங்கு சர்வ சாதாரணமாக நடைபெற்றன. பன்வாரி பணியாற்றிய பகுதியில் குழந்தைத் திருமணங்கள் எதுவும் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து தகவல் செல்லும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டு ராம்கரன் குஜ்ஜார் என்ற ஒருவரது குடும்பத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறவிருந்தது. அதை அரசுக்குத் தெரிவித்து தடுத்து நிறுத்தினார் பன்வாரி.
அதனால், ராம்கரன் குஜ்ஜாரும் அவரது உறவினர்களும் கடும் கோபம் அடைந்தனர். ராம்கரன் குஜ்ஜார் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், பன்வாரி தேவியை அவரது கணவரின் கண் எதிரிலேயே கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்தனர். அது குறித்து பன்வாரி அளித்த புகாரை வாங்குவதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர். அதனால், இரவு முழுவதும் காவல் நிலையத்தின் வாசலிலேயே சத்யாகிரகம் செய்தார் பன்வாரி. விடியற்காலையில் மக்கள் கூடி பன்வாரிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விஷயம் ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகு அவரது புகாரைப் பெற்றுக்கொண்டது காவல்துறை. ஆனாலும், பன்வாரிக்கு நீதி கிடைக்கவில்லை.

அதையடுத்து, பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக சில உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ‘விசாகா’ என்ற பெயரில் சில பெண்கள் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதன் விளைவாக 1997ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியன்று உச்சநீதிமன்றம் சில வழிகாட்டல்களை அளித்தது.
பணியிடங்களில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசுதல், ஆபாசமான பாடல்களைப் பாடுதல், ஆபாசமான படங்களைக் காண்பித்தல், வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலமான ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை பாலியல் வன்முறைகள் என்று உச்சநீதிமன்றம் வரையறை செய்தது. பாலியல் ரீதியான வன்முறையற்ற பணிச்சூழலை உருவாக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
முக்கியம் அம்சங்கள் சில:
பத்துப் பெண்கள் அல்லது அதற்கு மேல் பெண்கள் பணிபுரியும் இடங்களில் கண்காணிப்புக் கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும்.
அந்த கமிட்டியின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட வேண்டும். அதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாக இருக்க வேண்டும். அந்த நிறுவனத்தைச் சாராத ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பின் பிரதிநிதி ஒருவர் வெளியாளாக அந்தக் குழுவில் இடம் பெற வேண்டும்.
புகார்கள் மீதான விசாரணையை இந்த கமிட்டி விசாரித்து, குற்றம் நடந்திருக்கக் கூடும் எனக் கருதினால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். புகார் கொடுக்கும் காரணத்தால் பாதிக்கப்பட்ட பெண் மீது பழிவாங்கும் நடவடிக்கை போன்றவை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கு இந்த வழிகாட்டல்களின்படி அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பு கூறப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டு காலத்தில் அரசு அலுவலகங்களிலோ, தனியார் பணியிடங்களிலோ உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்களின் படி புகார் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? அமைக்கப்பட்டுள்ள கமிட்டிகள் சிறப்பாகச் செயல்படுகின்றனவா?

“இன்சூரன்ஸ், பொதுத்துறை வங்கிகள், தொலைத்தொடர்புத்துறை, ரயில்வே, தபால் தந்தி, வருமான வரித்துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் புகார் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுத் துறைகளைப் பொருத்தவரையில், பல அலுவலகங்களில் புகார் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து அலுவலகங்களிலும், அனைத்துத் துறைகளிலும் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. காவல்துறை, நீதித்துறை போன்றவற்றில் புகார் கமிட்டிகள் இல்லை.
"அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாலியல் புகார் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட உயரதிகாரியைச் சந்தித்து சமீபத்தில் வலியுறுத்தினோம். ஆனால் அவர், ‘எந்த இடத்தில் கமிட்டி இல்லை என்று சொல்லுங்கள், அமைத்து விடுகிறோம்’ என்று சொன்னார். உடனே நாங்கள், ‘எத்தனை இடங்களில் கமிட்டி அமைத்திருக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லுங்கள்’ என்று கேட்டோம். அதற்கு அவரிடம் பதில் இல்லை" என்றார் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் (சி.ஐ.டி.யு.) மாநில அமைப்பாளர் மாலதி சிட்டிபாபு.
"விசாகா தீர்ப்பு வந்த பிறகு, தமிழ்நாட்டில் நீதிமன்றங்களில் பணியாற்றும் அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் செய்வதற்கான ஏற்பாடு வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அப்போதைய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் மனுக் கொடுத்தோம். அதற்கு அவர், ‘நீதிமன்றத்தில் ஆண்களும் பெண்களும் பிரச்சினையின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். விசாகா தீர்ப்பு வந்த பிறகுதான், பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. இப்போது பெண்கள் தங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் வருவதாக புகார் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்’ என்று சொன்னார் தலைமை நீதிபதி. அவரது கருத்து எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது" என்றார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நாகஷைலா.
பல இடங்களில் புகார் வந்த பிறகுதான் கமிட்டியே அமைக்கிறார்கள். அமைக்கப்பட்ட கமிட்டிகளும் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. பெரும்பாலான கமிட்டிகள் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்களின்படி அமைக்கப்படவில்லை. பெரும்பாலும் அதிகாரிகளே கமிட்டிகளில் இடம் பெற்றுள்ளனர். கமிட்டியில் 50 சதவிகித உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்றும், என்.ஜி.ஓ.வை சேர்ந்த ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் விசாகா வழிகாட்டலில் உள்ளது.
கமிட்டியில் 50 சதவிகிதம் பெண்கள் இருந்தால் மட்டுமே போதாது. பாலியல் பிரச்சினை குறித்த சரியான பார்வை கொண்டவராகவும், சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடியவராகவும் அவர்கள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அப்படியெல்லாம் பார்த்து கமிட்டி அமைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கவே செய்கிறது.

சரி, புகார் கமிட்டிகள் உள்ள இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வருகிறார்களா என்று, வணிகவரித்துறையில் உள்ள புகார் கமிட்டியின் பெண் உறுப்பினர் ஒருவரிடம் கேட்டோம்.
"பொதுவாகவே, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளன. ஆனால், அந்தப் பிரச்சினைகள் வெளியே வருவது இல்லை. ஏனென்றால், பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தால், அந்தப் பெண் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நான் உறுப்பினராக இருக்கும் புகார் கமிட்டியில் இதுவரை ஒரு புகார் கூட வந்தது இல்லை. அதற்காக பாலியல் தொல்லைகளே இல்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்ய முன்வராததற்குப் பல காரணங்கள் உண்டு" என்றார் அவர்.
புகார் கொடுக்கும் பெண்ணுக்கு நியாயம் கிடைப்பதில்லை என்பது மட்டுமல்ல, அவர் வேறு பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார். ‘வெளியில் தெரிந்தால் உனக்குத்தான் அசிங்கம், புகாரை வாபஸ் வாங்கிவிடு’ எனப் புகார் கொடுத்த பெண்ணையே மிரட்டும் போக்குதான் உள்ளது. அதற்குப் பின்னும் அவர் புகாரை வாபஸ் வாங்காவிட்டால், அவர் தனிமைப் படுத்தப்படுவார். அவரது வேலைச் சுமை அதிகரிக்கும். வேறு பல விதங்களிலும் அவர் பழிவாங்கப்படுவார்.
"தமிழக அரசுத்துறை ஒன்றில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கு அவரது மேலதிகாரி தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண், புகார் கமிட்டியில் புகார் கொடுத்துவிட்டார். புகாரை வாபஸ் வாங்குமாறு கமிட்டியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். விளைவு என்ன தெரியுமா? அந்தப் பெண்ணிடம் யாரும் பேசக் கூடாது என்று அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் மிரட்டப்பட்டனர். அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் மீது கூடுதலான வேலைகள் திணிக்கப்பட்டன. மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அலுவலக வேலைகளை அவரால் செய்துமுடிக்க முடியவில்லை. அவருக்கு ஒரே மாதத்தில் 30 மெமோக்கள் கொடுக்கப்பட்டன. பழிவாங்கலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அப்பெண் மனமுடைந்து போனார். கடைசியில், இப்பிரச்சினையில் மகளிர் ஆணையம் கூட தலையிட்டது" என்றார் வேளாண் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர்.
இதே போல பழிவாங்கும் நோக்கத்தோடு பெண் காவலர் ஒருவர் மாத விலக்கு நாளன்று தொடர்ந்து நான்கு மணி நேரம் நின்றுகொண்டே இருக்குமாறு பணிக்கப்பட்டாராம்.
இதே போல பழிவாங்கும் நோக்கத்தோடு பெண் காவலர் ஒருவர் மாத விலக்கு நாளன்று தொடர்ந்து நான்கு மணி நேரம் நின்றுகொண்டே இருக்குமாறு பணிக்கப்பட்டாராம்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் அது குறித்து முறையிடுவதற்கு இங்கு கமிட்டி இருக்கிறது என்பது அந்த அலுவலகத்தில் பணி புரிவோருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது எங்குமே நடப்பதில்லை.
"அரசுத்துறைகளில் பல இடங்களில் பெயரளவுக்காவது புகார் கமிட்டிகள் உள்ளன. ஆனால், ‘புகார் கமிட்டியா, அப்படீன்னா என்ன?’ என்று கேட்கின்றன தனியார் நிறுவனங்கள். தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமான தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கு ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை செய்கின்றனர். அங்கெல்லாம் புகார் கமிட்டிகள் இல்லை. தனியார் நிறுவனங்களில் புகார் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை என்றாலும், அங்கே தொழிற்சங்கங்கள் இருப்பதால் அதன் மூலம் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வைக்க முடிகிறது. ஆனால், சாஃப்ட்வேர் நிறுவனங்கள் மாதிரியான பணியிடங்களில் அதற்கும்கூட வாய்ப்பில்லை" என்கிறார் மாலதி சிட்டிபாபு.
தனியார் நிறுவனங்களில் இது போன்ற கமிட்டிகள் இல்லாததற்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களைப் பாதுகாப்பதற்கென்று சட்டங்கள் இல்லை. 1997லேயே உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த போதும், அவற்றின் அடிப்படையில் மாநில, மத்திய அரசுகள் சட்டமியற்ற வேண்டும் எனச் சொல்லியிருந்த போதும், ஒன்பது ஆண்டுகளுக்கு ஒன்றுமே நடக்கவில்லை.
பெண்கள் அமைப்புக்களின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பின் 2006ம் ஆண்டு சட்ட வரைவு ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் விசாகா தீர்ப்பில் கூறப்பட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பல இடம் பெறவில்லை. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜே.எஸ். வர்மாவே இதைக் குறிப்பிட்டு அந்த வரைவை விமர்சித்தார்.பல மாற்றங்களுக்குப் பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேறொரு சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் பணியாற்றுகிற பெண்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வாடிக்கையாளராகவோ, பயிற்சியாளராகவோ, தினக்கூலியாகவோ அங்கு வருகிற பெண்களுக்கும் இச்சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆகியோருக்கும் இச்சட்டம் பொருந்தும். அமைப்புசாரா துறைகளில் பணியாற்றுவோரும் இச்சட்டத்தின் கீழ் வருகிறார்கள். இச்சட்டத்தில் கூறப்படும் விஷயங்களை நிறைவேற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது முதலாளி 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று மசோதாவில் உள்ளது. உரிய ஆதாரங்களுடன் புகாரை நிரூபிக்கத் தவறினால், புகார் அளிக்கும் பெண்ணுக்கு தண்டனை உண்டு என்கிற ஒரு அம்சம் இந்த மசோதாவில் உள்ளது. இது இன்னமும் சட்டமாகவில்லை.
சட்டம் மாத்திரம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. கலாசார ரீதியாகவும் சில மாற்றங்கள் நேர வேண்டும். பெண்களை ஒரு போகப் பொருளாக மட்டும் பாராமல், ஒரு சகஜீவியாகப் பார்க்கும் மனோபாவம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதில் குடும்பம், வகுப்பறைகள், ஊடகங்கள் உள்பட பலவற்றிற்கும் பங்கு உண்டு. சமூகம் அதை நோக்கி நடக்கிறதா, இல்லையா என்பதுதான் நிஜமான பிரச்சினை.
-ஆ.பழனியப்பன்
-ஆ.பழனியப்பன்
நன்றி: புதிய தலைமுறை

No comments:
Post a Comment