மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு?
இரு வாரங்களுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே மூச்சில் ஐந்து ரூபா உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உயர்வின் அதிர்ச்சியை இதற்குள் நீங்கள் ஓரளவு ஜீரணித்துக் கொண்டு மீண்டெழுந்திருக்கலாம். ஆனால், அவசரப்பட்டுஆறுதல் அடைய வேண்டாம். இன்னொரு விலை உயர்வு காத்திருக்கிறது. அநேகமாக அது உங்கள் வீட்டு காஸ் சிலிண்டருக்காக இருக்கலாம்.
இந்தக் கட்டுரையின் முதல் வரியில் உள்ள ‘இ’யை எழுதிக் கொண்டிருக்கும்போது (மே 23, பகல் 12:55) ஒரு சேதி வந்து முன் நிற்கிறது. ‘புதுடில்லி’: ஏற்கெனவே பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையும் விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது. டீசல் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெ நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்க மத்திய அமைச்சரவையின் அமைச்சர்கள்குழு (உட்ணீணிதீஞுணூஞுஞீ எணூணிதணீ ணிஞூ –டிணடிண்ணாஞுணூண் உஎணி–) இன்னும் இரண்டு தினங்களில் கூடி முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். டீசல் விலை லிட்டருக்கு 4 வரையிலும், சமையல் எரிவாயு விலை சிலிண்டர் ஒன்றுக்கு 25 வரையிலும் அதிகரிக்கும் என தெரிகிறது’ என்கிறது சேதி.
சமையல் எரிவாயுவின் விலை உயர்வது மட்டுமல்ல, அதற்கு வேறு சில கட்டுப்பாடுகளும் வரக்கூடும் என்ற ஊகங்கள் உலவுகின்றன அதாவது, வீட்டு உபயோகத்திற்கு ஒரு வாடிக்கையாளருக்கு ஓராண்டுக்கு 4 அல்லது 5 சிலிண்டர்களை மட்டுமே விநியோகிப்பது என்றும், அதற்கு மேல் தேவைப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு சிலிண்டர்களைத் தாராளமாக வழங்குவது என்கிற முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், வெளிச்சந்தையில் விற்கப்படும் சிலிண்டருக்கு மானியம் அளிக்கப்படாதாகையால் அதன் விலை வீட்டுக்கு வழங்கப்படும் விலையைவிட பல மடங்கு கூடுதலாக இருக்கும். அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால் நடுத்தரக் குடும்பங்களின் நிலை மூச்சுத் திணறுவதாக ஆகிவிடும்.
தற்போது சேன்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 352 ரூபாயாக உள்ளது. 50 ரூபா உயர்த்தப்பட்டால், சிலிண்டரின் விலை 400 ரூபாயைத் தாண்டிவிடும். உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை தற்போது 1,288 ரூபாயாக உள்ளது. இதன் விலையும் மேலும் அதிகரிக்கும்.
மே14ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்ட உடனேயே இது போன்ற சேதிகள் வரத் துவங்கி விட்டன. தில்லியிலிருந்து வெளிவரும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழ் (மே, 16ம் தேதி) மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் இதே அளவிற்கு (லிட்டருக்கு 5 ரூபா) பெட்ரோல் விலை உயரும் என எண்ணெய் நிறுவன அதிகாரியை மேற்கோள் காட்டி ஒரு சேதி வெளியிட்டிருந்தது.
கடந்த ஓராண்டிற்குள், பெட்ரோல் விலை ஒன்பது முறை உயர்ந்து விட்டது. கடந்த 11 மாத காலத்தில் 15 ரூபா, அதாவது 32 சதவிகித அளவுக்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கயிறு அறுந்த கன்றுக் குட்டி மாதிரி பெட்ரோலியப் பொருட்களின் விலை கன்னாபின்னாவென்று எகிறக் காரணம் என்ன?
‘சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை பீப்பா ஒன்றுக்கு 110 டாலரை தொட்டுவிட்டது. இதனால், எண்ணெ நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று காரணம் கூறுகிறது பெட்ரோலிய அமைச்சகம்.
இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று: சர்வதேசச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உள்ளூர் விலையை மாற்றி அமைக்கிறார்கள் என்றால், ஒன்பது தடவை விலை உயர்த்தப்படும்போது, ஒரு தடவையாவது விலை குறைந்திருக்க வேண்டும். ஏனெனில், எப்போதுமே சர்வதேசச் சந்தை ஏறுமுகமாக மட்டுமே இருந்ததில்லை. ஆனால், எப்போதும் சந்தை விலையில் உயர்வு மட்டுமே இருக்கிறது. குறைவு என்பது ஒருபோதும் இல்லை. இரண்டாவது கேள்வி: உண்மையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றனவா? 31.03.2010 நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஈட்டிய லாபம் (வரி சேலுத்திய பின்) 10 ஆயிரத்து 220 கோடி. அதற்குப் பின் வந்த 9 மாதங்களில் அதாவது 31.12.2010ல் அது ஈட்டிய லாபம் (வரிகளுக்குப் பின்) 3540 கோடி. இதே போல் இன்னொரு பெட்ரோலிய நிறுவனமான பாரத் பெட்ரோலியம், இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் 1537 கோடி. மற்றொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் லாபத்தில்தான் இயங்குகிறது. இவர்கள் நஷ்டம் நஷ்டம் எனச் சோல்வதெல்லாம் லாபத்தில் ஏற்படும் நஷ்டமே தவிர உண்மையான பண இழப்பல்ல.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் கடந்த ஆண்டு (ஜூன் 25, 2010) எண்ணெ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதனால், பெட்ரோல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என பிராணப் முகர்ஜி கூறுகிறார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை ஏற்கெனவே உயர்ந்து விட்ட போதிலும், பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை கடந்த ஜனவரியில் இருந்து எண்ணெ நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தனவாம். காரணம், தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலுக்கும் எண்ணெ நிறுவனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பிறகு எப்படி விலை உயர்வு முடிவை நிறுத்திவைக்கப்பட்டது? பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெ நிறுவனங்களுக்குப் போவிட்டாலும், மத்திய அரசின்கட்டுப்பாட்டில்தானே பொதுத்துறை எண்ணெ நிறுவனங்கள் இயங்குகின்றன. பின்புறமாக சாவியைக் கொடுத்துவிட்டு, எண்ணெ நிறுவனங்கள்தான் விலையை முடிவு சேகின்றன என்று தனது பொறுப்பை சுலபமாகத் தட்டிக்கழிக்கிறது மத்திய அரசு.
சரி, சர்வதேசச் சந்தையுடன் பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்புபடுத்தி வைக்கப்படும் வாதம் சரிதானா?
"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை உயர்வதையும், உள்நாட்டுச் சந்தையில் எண்ணெ விலை உயர்த்தப்படுவதையும் முடிச்சுப்போடுவது அபத்தமானது" என்று சாடுகிறார் பிரபல பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ்.
"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை நிலையில்லாமல் (ஙணிடூச்ணாடிடூஞு ண்டிணாதச்ணாடிணிண) இருப்பதற்கு ஊக வணிகமே காரணம். அங்கு நிலையில்லா தன்மை என்பது சேயற்கையாக உருவாக்கப்படுகிறது. சர்வதேசச்சந்தையில் கச்சா எண்ணெ விலை உயர்ந்தால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை இங்கு உயர்த்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கச்சா எண்ணெ இறக்குமதி மீதான கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வையைக் குறைத்தாலே பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. அதைப்போல, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை மத்திய அரசு குறைத்தால் விலை உயர்வுக்கு அவசியம் இருக்காது. ஆனால், இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தயாராக இல்லை" என்கிறார் ஜெயதி கோஷ்.
இந்த வாதம் எவ்வளவு தூரம் சரியானது?
கடந்த நிதியாண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலை பீப்பா ஒன்றுக்கு (160 லிட்டர்கள்) 69.76 டாலர்களாக இருந்தது. அப்படியென்றால், ஒரு லிட்டர் கச்சா எண்ணெ விலை 0.43 டாலர்கள். அதாவது 19.62. எண்ணெ சுத்திகரிப்பு நிலையங்களின் சேலவில் 90 சதவிகிதம் கச்சா எண்ணெக்குரியது என்கிறது பரீக் கமிட்டியின் அறிக்கை. அதைக் கணக்கில்கொண்டால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளிவரும் கச்சா எண்ணெயின் விலை லிட்டருக்கு 21.58 ஆக இருக்கும். இது வரி விதிப்புக்கு முந்தைய நிலை. பெட்ரோல் விற்கப்படும் விலையில் 21.58 விலக்கிவிட்டால் மீதி அனைத்தும் வரிகள் உள்ளிட்ட வசூலிப்புகள்தான்.
ஒட்டுமொத்தமாக, பெட்ரோல் விலையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வரிகளாகவே வசூலிக்கப்படுகின்றன. எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஆனால், ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன.
பெட்ரோல் விலை உயர்த்தப்படும் போதெல்லாம் விற்பனையில் ஏற்படும் இழப்பை அரசு மானியங்கள் கொடுத்து ஈடுசேது வருகிறது. எனவே, விலை உயரும்போது மானியத்தின் அளவும் உயர்கிறது. அதைத் தவிர்க்க விலை உயர்த்தப்படுகிறது என்றொரு கருத்து சோல்லப்படுவதுண்டு. ஆனால், அது ஒரு கண் துடைப்பு வாதம் என்பதை அரசின்புள்ளி விவரங்களில் இருந்தே புரிந்துகொள்ள முடியும்.
"2009-2010ம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மத்திய அரசின் கஜானாவிற்கு பெட்ரோலியத்துறை மூலமாக 56365 கோடி ரூபா போச் சேர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் எண்ணெ வியாபார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணெப் பத்திரங்கள் (ˆடிடூ ஆணிணஞீண்) உட்பட அரசால் வழங்கப்பட்ட மானியம் 14058 கோடி. அதாவது, வரிகள் உட்பட பெட்ரோலியத்துறையின் பங்கு 25 சதவிகிதம். எனவே, வரிகளாக மக்கள் கொடுப்பது 100 ரூபா. மானியம் என்ற பெயரில் அரசு கொடுப்பது 25 ரூபா. இதில் கொடுமை என்னவென்றால், கடுமையான பணவீக்க காலத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி, கச்சா எண்ணெ மீதான இறக்குமதி வரி ஆகியவற்றை உயர்த்தியதன் மூலமாக 30 ஆயிரம் கோடி ரூபா கூடுதல் வருவாயை அரசு ஈட்டியது. இந்த வகையில் 2010-2011ம் ஆண்டில் மானியத்தை 20 சதவிகிதமாக அரசு குறைத்துவிட்டது. உண்மை என்னவென்றால், 2001ம் ஆண்டில் பெட்ரோலியத்துறை மூலம் அரசுக்குக் கிடைத்த வருவா 46603 கோடி. இது, 2008-2009ம் ஆண்டில் 93513 கோடியாக உயர்ந்தது" என்கிறார் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் சேவதற்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் திபங்கர் முகர்ஜி.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியம் பணமாகக் கொடுக்கப்படுவதில்லை. அரசின் கடன் பத்திரங்களாக வழங்கப்படுகின்றன. அவற்றை சந்தையில் விற்று, எண்ணெய் நிறுவனங்கள் பணமாக மாற்றிக் கொள்கின்றன. அதாவது, அரசின்கையில் இருந்து சல்லிக் காசு மாறுவதில்லை.
வரிகள் விலையின் மீது சதவிகிதத்தில் விதிக்கப்படுவதால் பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் அரசின் வருவா அதிகரிக்கிறது என்பதுதான் உண்மை. அரசுக்கு வரிகள் மூலம் மட்டுமல்ல, வேறு வழிகளிலும் பெட்ரோலியத் துறை வருவா ஈட்டித் தருகிறது. ஓர் உதாரணம், பெட்ரோல் சுத்திகரிப்பு.
இந்தியாவில் 20 முதல் 30 சதவிகிதம் வரை சர்வதேசச் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் கச்சா எண்ணெ கிடைக்கிறது. அதேபோல், இந்தியாவின் எண்ணெ சுத்திகரிப்புத் திறன், உள்நாட்டுத் தேவையைவிட மிக அதிகம். நாட்டின் இப்போதைய சுத்திகரிப்புத் திறன் 182.09 எம்எம்டி. (வரும் நிதியாண்டில் இது 255.83 எம்எம்டியாக உயரும் என மதிப்பிட்டிருக்கிறது திட்டக் குழு) உள்நாட்டு நுகர்வு 138.196 எம்எம்டி.
கை வசம் உபரியாக உள்ள திறனைப் பயன்படுத்தி இந்தியா பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி சேது வருகிறது. 2009-2010 நிதியாண்டில் 50.97 மில்லியன் மெட்ரிக் டன்(எம்எம்டி) பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி சேயப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் 23.49 எம்எம்டி அளவுக்குத்தான் இறக்குமதி நடந்திருக்கிறது.
சரி, பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெ விலையில் உயர்வு ஏற்பட்டால், உள்நாட்டில் விலையை உயர்த்தாமல், பற்றாக்குறையை சரிக்கட்டுவதற்கு மத்திய அரசிடம் எண்ணெத் தொகுப்பு நிதி (ˆடிடூ கணிணிடூ) இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தொகுப்பு நிதி கலைக்கப்பட்டுவிட்டது. மீண்டும் அதுபோன்ற ஏற்பாட்டை அரசு சேயுமானால் பெட்ரோல் விலை உயர்வுக்கு அவசியம் ஏற்படாது" என்கிறார் பொருளாதார வல்லுநர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா.
"எண்ணெய்த் தொகுப்பு நிதி போன்ற ஏற்பாடுகள் இப்போது பயனளிக்காது" எனக் கருதுகிறார் ‘ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் கன்சல்டிங் எடிட்டர் சுசீலா ரவீந்திரநாத். "நம் நாட்டில் கார், பைக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. எனவே, எண்ணெ நுகர்வும் அதிகரித்துக்கொண்டே சேல்கிறது. பொதுப்போக்குவரத்தை அதிகரிக்காத வரையில் எண்ணெ நுகர்வு மேலும் உயர்ந்து கொண்டுதான் சேல்லும். மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்தினால் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்" என்கிறார் அவர்.
"நாம் கச்சா எண்ணெ இறக்குமதி சேது, அதை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களாக ஏற்றுமதி சேகிறோம். அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மானியமாகக் கொடுத்தாலே பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்" என்கிறார் பத்திரிகையாளர் வே.மீனாட்சி சுந்தரம். அவர் மேலும் சில யோசனைகளைப் பட்டியலிடுகிறார்:
குபெட்ரோலியப் பொருட்களின் விலையில் சரி பாதியாக வரி உள்ளது. விமானப் போக்குவரத்திற்கு பயன்படும் எரிபொருளுக்கு விலையை குறைத்தது போல, மற்ற பெட்ரோலியப் பொருள்களுக்கும் வரிகள் குறைக்கப்பட வேண்டும்.
குஉள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலியப் பொருட்களுக்கு சர்வதேச விலையை நிர்ணயிக்கக் கூடாது.
குசந்தை விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
குஉள்நாட்டு பெட்ரோலியக் கச்சா உற்பத்தியை பெருக்க வேண்டும். நவீனத் தொழில் நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்காத வகையில் அந்த உற்பத்தி முறை இருக்க வேண்டும்.
ஏதோ ஒரு வகையில் இதற்குத் தீர்வு கண்டாக வேண்டும். ஏனெனில், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு என்பது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஏதோ கார், பைக் ஓட்டுகிறவர்களின் பிரச்சினை மட்டுமல்ல. பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால் காகறியிலிருந்து கட்டுமானப் பொருட்கள் வரை எல்லாவற்றின் விலையும் எகிறும் என்பதுதான் யதார்த்தம்.

No comments:
Post a Comment