Monday, 16 January 2012

சாலைகளா? பள்ளாங்குழிகளா?

சாலைகளா? பல்லாங்குழிகளா?சமீபத்திய மழையில் தமிழகச் சாலைகள் கடுமையாக சீர்குலைந்துள்ளன. எந்த மழையையும் எதிர்கொள்ளும் தரமான சாலைகளை நம்மால் உருவாக்க முடியாதா?சபரிமலைக்குச் சேல்பவர்கள் 48 நாட்கள் விரதமிருந்து, அதற்கான உடையணிந்து, இருமுடி கட்டித்தான் யாத்திரை சேல்வார்கள். ஆனால், இன்று தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் மக்கள் விரதமிருக்காமல் இருமுடி கட்டாமல், ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை... குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம்’ என்று பாடாத குறையாக சாலைகளின் மேடு பள்ளங்களில் தத்தளிக்கிறார்கள். காரணம், சமீபத்தில் தமிழகத்தில் அடித்து ஓந்திருக்கும் பருவமழை. இந்த மழையில் சிக்கிய ஏராளமான சாலைகள் சின்னாபின்னமாகி சாலைப் போக்குவரத்துக்குத் தகுதியற்றதாகி விட்டன. சாலை சீர்குலைவால் தமிழக மக்கள் பலவகையிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தலைநகர் சேன்னையில் நடந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து ஒன்று. சேன்னைச் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்க, முக்கியச் சாலை ஒன்று வாகனங்களின் நெரிசலில் திணறிக்கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக, இளைஞர் ஒருவரின் பைக் தடாலென ஒரு பள்ளத்தில் இறங்கியது. முன்சக்கரம் பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அதிர்ச்சிக்குள்ளாகிய அந்த இளைஞர், பள்ளத்தில் இருந்து பைக்கைக் கிளப்ப முயன்றார். முடியவில்லை. அப்போது, பின்னால் வந்த ஒரு லாரி அந்த இளைஞர் மீது வேகமாக மோதியதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்ற பல கோரச் சம்பவங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்தேறியுள்ளன. மழை பெது வானம் வெறித்த பின்னர், தண்ணீர் வடிந்து சாலைகள் பள்ளங்களா பல்லிளிக்கின்றன. வழியெங்கும் ஜல்லிக்கற்கள் பரவிக் கிடப்பதால், அதில் சறுக்கி விழுந்து விபத்துக்கு ஆளாகும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஏராளம். குண்டும் குழியுமான சாலைகளில் பயணிப்பதால், முதுகுத்தண்டுவடப் பாதிப்பு, கழுத்து வலி போன்ற பிரச்சினைகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். இந்த ஆண்டு அடித்த மழை என்றல்ல, ஒவ்வொரு ஆண்டு மழை பெது முடித்த பின்னும் இதே நிலைமைதான். ஏன் இந்த அவலம்? சாலைகளை
"
எப்படி அமைக்க வேண்டும், எந்த இடத்தில் எந்த மாதிரியான சாலை இருக்க வேண்டும், ஒவ்வொரு சாலையிலும் எந்த மாதிரியான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஏராளமான தரக்கட்டுப்பாடுகளும், வழிகாட்டல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், சாலை போடும் காண்டிராக்டர்களால் அவை எவையும் மதிக்கப்படுவது இல்லை என்பதுதான் அவலம். புதிதாக ஒரு சாலை அமைக்கப்பட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எந்தச் சூழலிலும் அந்தச் சாலை சேதமடையாமல் இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுச் சாலைகள் ஒரே ஆண்டில் சேதமடைந்து விடுகின்றன. சாலைகளுக்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணம் சேலவு சேயப்படுகிறதே தவிர, சாலைகள் நீண்டநாள் பயன் கருதித் திட்டமிட்டு அமைக்கப்படுவதில்லை" என்கிறார் ஓவுபெற்ற நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர் ஒருவர். சாலைகள் தரமில்லாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியக் காரணங்களில் ஒன்று, ‘கட்டிங்’ பிரச்சினை. மேலிடப் புள்ளிகளுக்கு கட்டிங் போச்சேர வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டவும், தங்களுடைய சட்டைப் பைகளை நிரப்பிக்கொள்ளவும் சாலைக்கு ஒதுக்கப்படும் நிதியின் ஒரு பகுதி சுருட்டப்படுகிறது. சாலைகள் சேதமடைவதற்குப் பல காரணங்கள் உண்டு. "மழைநீர் வடிகால் வசதி சரியாக இல்லாததும் இதற்கு முக்கியக் காரணம். தார், ஜல்லிக் கலவையைக் கொண்டு இங்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன. தாரின் மிகப் பெரிய எதிரி தண்ணீர். எப்படிப்பட்ட சர்வதேசத் தரமான சாலையாக இருந்தாலும், தண்ணீர் தேங்கினால் நிச்சயம் அந்தச் சாலை சீர்குலையும். எனவே, சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளைக் கண்டிப்பாகச் சேதாக வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்" என்கிறார் அண்ணா பல்கலைக்கழக நகர்ப்புறப் பொறியியல் துறையின் ஓவு பெற்ற பேராசிரியர் டி. அனந்தராஜன்.சேன்னை
"
உட்பட தமிழகத்தில் எங்குமே மழை நீர் வடிகால்கள் முறையாகவும், சரியாகவும் இல்லை. பல நகரங்களில் பாதாளச் சாக்கடைத் திட்டம் சேயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், சாலைகளைப் பாதுகாப்பது எப்படிச் சாத்தியம்? உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக சேன்னையின் சில இடங்களில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், சமீபத்திய மழை அந்தச் சாலைகளையும் பதம் பார்த்துவிட்டது. சேன்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் கழிவுநீர்க் கால்வா வசதிகள் இருந்தாலும்கூட சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாதது, வடிகால்கள் ஒன்றுடன் ஒன்று சரியாக இணைக்கப்படாதது, ஏரிகள், குளம், குட்டைகள் குடியிருப்புகளானது உள்ளிட்ட கோளாறுகளே இதற்குக் காரணம். சேன்னையில் சுமார் 100 கி.மீ. தொலைவிற்கு உலகத் தரத்துடன் புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளை நெடுஞ்சாலைத்துறையும், சேன்னை மாநகராட்சியும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. மழைநீர் வடிகால், நடைபாதை, சைக்கிள் ட்ராக், பார்க்கிங் வசதி உட்பட பல வசதிகளுடன் அந்தச் சாலைகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இத்திட்டம் சிறப்பாகச் சேயல்படுத்தப்பட்டால், அதை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தின் பிற நகரங்களிலும் தரமான சாலைகளை அமைக்க முடியும்" என்கிறார் சேன்னை சிட்டி கனெக்ட் அமைப்பைச் சேர்ந்த ராஜ் சேரூபால்.ஆனால்
"
, புதுச்சேரியைப் போன்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, அத்தனை வசதிகளும் ஒருங்கிணைந்த சாலைகளை அமைப்பதற்குப் போதிய இடவசதி இங்கு இல்லை என்று சோல்லப்படுகிறது. மிகத் தரமான சாலைகளைக் கொண்ட நாடு ஹாங்காங். அந்நாட்டின் சாலைகள் இங்குள்ள சாலைகளைவிட அகலம் குறைவானது. ஆனால், அவ்வளவு சிறிய பகுதிக்குள் அனைத்து வசதிகளையும் கொண்ட சாலைகளை மிகச் சிறப்பாக உருவாக்கி உள்ளனர். தமிழ்நாட்டுச் சாலைகளில் 40 சதவிகிதம் சரியாகப் பயன்படுத்தவில்லை. ஒரு சேன்டிமீட்டர் இடம் என்றாலும் அதை எவ்வாறு திட்டமிட்டு சரியாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது" என்கிறார் ராஜ் சேரூபால்.தமிழ்நாட்டில் பல மாநகராட்சிகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டவை. சேன்னை மாநகராட்சி தற்போது விரிவாக்கம் சேயப்பட்டுள்ளது. இந்நிலையில், வளர்ந்து வரும் பகுதிகளில் திட்டமிட்ட, தரமான சாலைகளை ஏற்படுத்துவதன்மூலம் சிறப்பான நகரங்களை உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment